223 யத்துகளில் வரி வசூல் செய்கின்ற வேலையைப் பொறுத்த மட்டில், கிராம அதிகாரிகளின் கடமைகள் அந்தந்த நிலே களுக்குத் தகுந்த மாதிரி, ரெவினியு டிவிஷனல் அதிகாரி யால் நிர்ணயிக்கப்படும். இந்த வேலே கீழ்க்கண்ட இரண்டு பலன்களே அளிக்கும் முறையில் செய்யப்பட வேண்டும். (i) அவர் செய்யும் அரசாங்க வேலேகளுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படாதவகையில், இப்படிப்பட்ட வேலேயை கிராம அதிகாரிகள் செய்ய வேண்டும். எங் கெங்கு பஞ்சாயத்துகளுக்கு இதனுல் சிப்பந்திகளின் செலவில் பொருளாதாரத் துறையில் மிச்சம் ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் அந்த முறையானது கடைப்பிடிக்கப்பட வேண்டும். (ii) வேலே அதிகமாகவும், அன்ருட அரசாங்க அலுவல்களுக்கு இடையூருகவும் இருந்தால், நகரப் பஞ்சா யத்துகளில் வீட்டு வரி வசூல் செய்யும் வேலேயை அவரிடம் ஒப்படைக்கக் கூடாது. 10. கிராமப் பஞ்சாயத்துச் செயலாளரின் அலுவல்கள் இந்த அலுவல்கள் பின்வருமாறு : ~~ (i) பஞ்சாயத்துக் கூட்டங்களின் குறிப்புகளே தயா ரித்துக் கொள்ளுதல். (ii) பஞ்சாயத்து ரொக்கக் கணக்கு வேலேகளைப் பார்த்து வைத்தல். (iii) பஞ்சாயத்தின் பொது நிர்வாகம் சம்பந்தப்பட்ட எழுத்து வேலைகள், நகரப் பஞ்சாயத்துகளேப் பொறுத்த வரையில், இந்த அலுவல்கள் முழுநேர ஊதியம் பெறும் சிப்பந்திகளில்ை செய்யப்படுகின்றன. ஆகவே, கிராம அதிகாரிகள் சேவை இதற்குத் தேவையில்லே. ஒரு முழுநேரம் பஞ்சாயத்துச் செயலாளரை நியமிப்பதினுல் ஏற்படுகின்ற செலவினத்தை பெரும்பாலான பஞ்சாயத்துகளில்ை சமாளிக்க இயலாது.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/710
Appearance