பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நோட்டீஸ் கொடுத்து விட்டதாக வாய்மொழியால் சொன்னல் மட்டும் போதாது. எழுத்து மூலமான ஆதாரம் இருக்க வேண்டும். எந்த அங்கத்தினராவது தமக்கு நோட்டிஸ் வரவில்லை என்பதாக புகார் செய்து, அதை நிரூபித்தும் விட்டால், தலைவருக்கு சிரமம் ஏற்படும். எனவே, இதில் அசிரத்தை கூடாது. 25. தலைமை வகிப்பவர் கடமை என்ன ? கூட்டத்துக்கு தலைமை வகிப்பவர், முறைப்படி போது மான நோட்டீஸ் கொடுத்து கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறதா என்பதை முதலில் கவனித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். அடுத்த படியாக, கூட்டத்துக்குப் போதுமான கோரம்" இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும்: ஆஜர் பட்டியலில் கூட்டத்துக்கு வந்துள்ள அங்கத்தினள் களின் கையொப்பத்தை வாங்க வேண்டும். கூட்ட நடவடிக்கை பற்றிய விதிகள் சரியாக பின்பற்றப் படுகின்றனவா என்று கவனிக்க (நடவடிக்கை குறிப்பு வேண்டும். கூட்ட நடவடிக்கைகள் மினிட்ஸ் (நடவடிக்கை குறிப்பு, புத்தகத்தில் ஒழுங்காகப் பதிவு செய்யப்படுகின்றனவா என்பதையும் கவனித்துக்கொள்ள வேண்டும். அஜண்டாவில் கண்ட வரிசைக் கிரமத்தில் விஷயங்களை ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். கூட்டத்தில் கொண்டு வரப்படும், தீர்மானங்களும், திருத் தங்களும் சரியாக இருக்கின்றனவா என்று கவனிக்க வேண்டும். பேச விரும்பும் அங்கத்தினர்கள் ஒவ்வொருவருக்கும் போதிய சந்தர்ப்பம் அளிக்கவேண்டும். ருவருக்கு

  • .; or ஆாவசியமாக ஒரே விஷயத்தைப்பற்றி மீண்டும் மீண்டும் ஒரே அங்கத்தினர் பேச இடம் தரக்கூடாது

அங்கத்தினர்களிடையே பாரபட்சம் காட்டக்கூடாஇ?