242 (2) தேர்ந்தெடுக்கப்பட்ட அபேட்சகரின் அல்லது அபேட்சகர்களின் தேர்தல் செல்லாதென தேர்தல் நீதி மன்றம் அறிவித்தால், அது மேற்கொண்டும் அடியிற்கண்ட வாறு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் : (a) இந்த விதிகளின்கீழ் அந்த ஸ்தானத்திற்குப் பாத்தியதை கொண்டாடியவரும் தேர்தல் மனுவில் ஒரு கட்சிக்காரராக இருந்தவருமான நபர், கிரமமாகத் தேர்ந் தெடுக்கப்பெற்றிருப்பதாக அறிவிக்க வேண்டும்; அல்லது (b) புதிய தேர்தல் நடத்த வேண்டுமென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். - (3) துணே விதிகள் (1), (2)ன்படி தேர்தல் நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவு முடிவானதாகும். (4) துனே விதி (1)ன்படி அல்லது (2)ன்படி பிறப் பிக்கப்பட்ட ஒவ்வொரு உத்தரவின் பிரதி ஒன்றை சம்பந்தப் பட்ட பஞ்சாயத்து யூனியன் கமிஷனருக்கும், தேர்தல் அதிகாரிக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 13. யாரேனும் ஒருவரின் தேர்தல் 12-வது விதியின் (1) துணை விதியின்படி செல்லாதென அறிவிக்கப்பட்டு, அந்த விதியைச் சேர்ந்த (2) துனே விதியின் (b) பகுதியின் கீழ் புதிய தேர்தல் நடத்த வேண்டுமென உத்தரவிடப்பட் டிருந்தால், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப, தேர்ந்தெடுக்கப்பட்ட அபேட்சகரின் ஸ்தானம் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட அபேட்சகர்களின் ஸ்தானங்கள் தேர்தல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த தேதி முதற்கொண்டு காலியாகி விட்டிருப்பதாகக் கருத வேண்டும் ; சம்பந்தப்பட்ட அதிகார சபை புதிய தேர்தல் நடத்துவதற்கு அவசியமான நடவடிக் கைகளே உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும். 14. (1) மேற்சொன்ன விதிகளில் என்ன சொல்லி யிருந்த போதிலும் பாதகமில்லாமலே, ஒருவருக்கு மேற்பட்ட நபர்கள் பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் தலைவராகவோ துணேத் தலைவராகவோ தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாக உரிமை கொண்டாடியிருந்து, 2-வது விதியின் (1) துணை விதியில் குறிப்பிட்டுள்ள கால அளவிற்குள் அவர்களில் எவருடைய தேர்தலேயும் ஆட்சேபித்து தேர்தல் நீதி மன்றத்திற்குத் தேர்தல் மனு கொடுக்கப்பட்டிராவிட்டால் அல்லது அத்தகைய தேர்தல் மனு அல்லது மனுக்கள் கொடுக்கப்பட்டிருந்து பின்னுல் வாபஸ் பெறப்பட்டிருந்தால், தேர்தல் அதிகாரி தாம் அவசியமெனக் கருதுகிற விசாரணே செய்த பிறகு (a) உரிமை கொண்டாடுபவர்களில் ஒருவர், சந்தர்ப்பத்திற்கேற்ப பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/728
Appearance