உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/730

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 செய்யப்பட்ட விதிகள், பஞ்சாயத்துச் சட்டத்தின் 19-வது பிரிவைச் சேர்ந்த (7) உட்பிரிவின்கீழ் பஞ்சாயத்து யூனியன் மன்ற அங்கத்தினர் தேர்தல் விஷயமாக இயன்ற வரையில் பயன்படும். 2. இந்த உட்பிரிவின்கீழ் பஞ்சாயத்து யூனியன் மன்றம் தேர்ந்தெடுத்த நபர், சாதாரண அல்லது தற்செயல் காலி நேரிட்டிருக்கிற பஞ்சாயத்தின் அல்லது நகர அமைப்புக் குழுவின் அங்கத்தினராய் இருக்க வேண்டும். 6. தேர்தல் ரகசியத்தை மீறுதல் (ப. ச. 24, ப. ச. 179) விதிகள் 1. ஒட்டுச் சாவடி அலுவலர், குமாஸ்தா அல்லது தேர்தல் அறையில் உடனிருந்து கவனித்துக் கொள்ளும் இதர நபர் எவரும் சட்டத்தினுல் அதிகாரம் அளிக்கப்படுகிற காரியத்திற்காகவன்றி மற்றபடி, யாராவது ஒரு வாக்காளர் எந்த அபேட்சகருக்கு வாக்களித்துள்ளார் என்பதை நேரடி யாகவோ மறைமுகமாகவோ காண்பிக்கிற தகவல் எதையும் எவருக்கும் தெரிவிக்கக் கூடாது. 2. எவரேனும் அந்த விதியை மீறி நடந்தால், அவருக்கு நூறு ரூபாய் வரையில் அபராதத் தண்டன்ே விதிக்கப்படும். - 7. தலைவர், துணைத்தலைவர், அங்கத்தினர் ராஜினுமா (ப. ச. 178. 1. (2) (5) - விதிகள் 1. பஞ்சாயத்து யூனியன் மன்றத் தலேவர் அல்லது துணைத் தலைவர் நீங்கலாக அதன் வேறு யாரேனும் ஒரு அங்கத்தினர் தலேவருக்கு எழுதிய அறிவிப்பு கொடுத்து விட்டு தம்முடைய புதவியை ராஜிநாமாச் செய்யலாம். அந்த ராஜிநாமாவைத் தலைவர் பெற்றுக்கொள்கிற தேதியிலிருந்து அது அமுலுக்கு வரும். 2. பஞ்சாயத்து யூனியன் மன்றத் தலைவர், பஞ்சாயத்து யூனியன் மன்றத்திற்கு எழுதி அறிவிப்பு கொடுத்து தமது பதவியை ராஜிநாமா செய்யலாம். அந்த ராஜிநாமா பஞ்சா யுதது யூனியன் மன்றத்தின்முன் வைக்கப்படுகிற தேதியி லிருந்து அமுலுக்கு வரும்.