உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/735

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249 10. அலுவல் நடத்தும் முறை (ப.ச. 47. (1) 1. பஞ்சாயத்து யூனியன் மன்றம் ஓர் அலுவலகத்தை ஏற்படுத்த வேண்டும். பஞ்சாயத்து யூனியன் மன்றம் ஏற் பாடு செய்யும் தினங்களிலும், நேரங்களிலும் அலுவல் நடத்த அங்கு சபை கூட வேண்டும். சபை கூட வேண்டும் என்று தலைவர் அறிவிக்கும்போதெல்லாம் சபை கூட வேண்டும். 2. (1) கூட்டம் நடக்கும் தினம், நேரம், நடத்த வேண்டிய அலுவல் இவை குறித்து ஓர் அறிவிப்பு, கூட்டத் தேதிக்கு 5 நாட்கள் முன்னதாக கொடுக்கப்பட்டாலொழிய எந்தக் கூட்டமும் நடத்தப்படக்கூடாது. (2) அவசர விஷயங்களில் தலைவர், (1) துணைவிதி யில் குறிப்பிட்டுள்ள தினங்களுக்குக் குறைவாக அறிவிப்பு கொடுத்து கூட்டத்தைக் கூட்டலாம். (3) கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலே கமிஷனர், தலேவரு டன் கலந்து ஆலோசித்துத் தயாரிக்க வேண்டும். மன்றம் ஆலோசிக்க வேண்டும் என்று தாம் கருதுகிற எந்த விஷ யத்தையும் தலைவர் குறிப்பிடுகிற எந்த விஷயத்தையும் கமிஷனர் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கலாம். நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ள விஷயத்தின் மீது தலேவரும் கமிஷனரும் ஒரு குறிப்பில் தமது கருத்துக்களேப் பதிவு செய்ய உரிமை யுள்ளவராவர். அந்தக் குறிப்பு அங்கத்தினர்களுக்கு அனுப் பப்பட வேண்டும். அல்லது அத்தகைய விஷயத்தை மன்றம் ஆலோசிப்பதற்கு முன்பு அல்லது ஆலோசிக்கும் போது அது மன்றத்தின் முன்பு வைக்கப்பட வேண்டும். 3. (1) மூன்றில் ஒருபங்குக்குக் குறையாத மன்ற அங் கத்தினர்கள் எழுதிக் கேட்டுக் கொள்வதன்மேல், தலைவர் மன்றக் கூட்டம் ஒன்றைக் கூட்ட வேண்டும். ஆளுல், எப் போது கூட்டம் நடத்தப்பட வேண்டும், எதற்காக நடத்தப் பட வேண்டும் என்பதை அந்த அங்கத்தினர்கள் குறிப்பிட் டிருக்க வேண்டும். கூட்டத் தேதிக்கு குறைந்தது பத்து தினங்களுக்கு முன்பு தலைவரிடம் அல்லது அலுவலகத்தில் உள்ள வேறு யாராவது ஒரு நபரிடம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் வேலே செய்யும் நேரங்களில் அந்த வேண்டு கோள் சேர்ப்பிக்கப்பட வேண்டும். III-17