பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/736

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 (2) அந்த வேண்டுகோள் சேர்ப்பிக்கப்பட்டதிலிருந்து 48 மணி நேரத்துக்குள் அந்த வேண்டுகோளில் குறிப்பிட்ட தினத்தில், கூட்டத்தைக் கூட்ட தலைவர் தவறில்ை, அந்த வேண்டுகோளில் கையொப்பமிட்ட அங்கத்தினர்கள் அந்தக் கூட்டத்தைக் கூட்டலாம். ஆனல் (1) துனே விதியில் அல்லது 2-வது விதியில் வகை செய்துள்ளபடி அறிவிப்பு ஒன்றை அவர்கள் இதர அங்கத்தினர்களுக்கு அனுப்ப வேண்டும். 4. பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் எல்லா கூட்டங் களிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். ஆளுல்ை, தலைமை வகிக்கும் அங்கத்தினர், மன்றம் கேட்டுக்கொள் வதன்மேல், குறிப்பிட்ட ஏதாவது ஒரு விஷயத்தில், பொது வாக பொதுமக்களும் எல்லாரும் அல்லது குறிப்பிட்ட யாரா வது ஒரு நபர் வெளியேற வேண்டும் என்று கட்டளேயிடலாம். அதற்கான காரணங்கள் 9-வது விதியின் கீழ் வைக்கப்பட் டுள்ள நடவடிக்கைக் குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். 5. ஏதாவது ஒரு கூட்டத்தில், மன்றத்தின் முன்பு வரும் எல்லா விஷயங்களும், வந்திருக்கும் அங்கத்தினர்களில் பெரும்பான்மையோரால் முடிவு செய்யப்படும். அதற்காக வாக்கெடுப்பு நடக்கும், வாக்குகள் சமமாக இருக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் தலைமை வகிக்கும் அங்கத்தினர் இரண்டாவது வாக்கை அல்லது காஸ்டிங் ஒட்டை வழங் குவாா. 6. மன்றத்தில் அப்போதுள்ள அங்கத்தினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் வந்திருந்தாலொழிய ஒரு கூட்டத்தில் எந்த அலுவலும் நடத்தப்படக்கூடாது. 7. ஒரு கூட்டத்திற்காக நிச்சயிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு அரை மணி நேரத்திற்குள் வந்திருக்க வேண்டிய அங்கத்தினர்கள் வராவிட்டால், வந்திருக்கும் எல்லா அங்கத் தினர்களும் இன்னும் சிறிது காத்திருக்க ஒப்புக்கொண்டா லொழிய அந்தக் கூட்டம் ஒத்திப் போடப்படும். 8. மன்றத்தில் எந்தத் தீர்மானமும் அது நிறைவேற் றப்பட்ட மூன்று மாதங்களுக்குள் மாற்றப்படக் கூடாது அல்லது ரத்து செய்யப்படக்கூடாது. ஆல்ை, அது விஷய