பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/739

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253 4. தலைவர், அனுமதிக்கும் ஏதாவது ஒரு தீர்மானம் கூட்டத்திற்கான அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்பட்டியலில் குறிப்பிடப்பட வேண்டும். 5. (1) அலுவல் பட்டியலில் கண்டுள்ள ஒரு தீர்மானம் எந்த நபரின் பெயரில் செய்துகொள்ளப்பட்டுள்ளதோ அந்த அங்கத்தினரைக் கேட்டுக் கொள்வதன்மேல் அவர் (a) தீர்மானத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். அவ்விஷ யத்தில் ஒரு சிறிய அறிக்கையை மட்டும் அவர் கொடுக்க வேண்டும் ; அல்லது (b) தீர்மானத்தைக் கொண்டு வரலாம். (2) ஓர் அங்கத்தினரைக் கூப்பிடும்போது அவர் வராதிருந்தால் அல்லது தீர்மானத்தை வாபஸ் பெற அவர் விரும்பினால் அல்லது தீர்மானத்தைக் கொண்டுவர விரும்பா விட்டால் அல்லது கூட்டத்திற்கு முன்பு அவர் அங்கத்தின ராக இல்லாமல் போய்விட்டால், கூட்டத்திற்கு வந்திருக்கும் யாராவது ஒரு அங்கத்தினர் மேற்படி தீர்மானத்தைக் கொண்டு வரலாம். எந்த அங்கத்தினரும் அதைக் கொண்டு வராவிட்டால் அது வாபஸ் பெறப்பட்டதாக கருதப்படும். (3) கொண்டு வரப்படும் ஒவ்வொரு தீர்மானமும் ஆமோதிக்கப்பட வேண்டும். - 6. தலைவரின் அனுமதியில்லாமல் எந்த அங்கத்தினரும் 15 நிமிஷங்களுக்கு மேல் பேசக்கூடாது. ஆல்ை, ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருபவர் அதைக் கொண்டு வருகையில் 30 நிமிஷங்களுக்கு மேற் படாமல் பேசலாம். 7. ஒரு தீர்மானம் பற்றிய விவாதம், தீர்மானத்தில் கண்டுள்ள விஷயம் பற்றியதாகத் தான் இருக்க வேண்டும். 8. (1) ஒரு தீர்மானம் பற்றி விவாதம் நடக்கையில் 2, 3, 6, 7-வது விதிகளுக்கு உட்பட்டு, எந்த அங்கத் தினரும் மேற்படி தீர்மானத்திற்குத் திருத்தத்தைக் கொண்டு வரலாம. (2) கொண்டு வரப்படும் ஒவ்வொரு திருத்தமும் ஆமோதிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், அது விவாதிக்கப் படமாட்டாது. - 9. (1) ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ள அல்லது ஒரு தீர்மானத்திற்குத் திருத்தம் கொண்டுவந்துள்ள ஒர் அங்கத்தினர் பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அனுமதியில்லாமல் அதை வாபஸ் பெறக் கூடாது.