பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது தலைவரோ துணைத் தலைவரோ வந்து விட்டால், தலைமை வகிப்பவள் எழுந்து அந்த இடத்தைத் தலைவருக்குக் கொடுத்து விட வேண்டும். 28. பிரசிடென்ட் டெலிகேட் என்ருல் என்ன ? தலைவருக்கோ, அல்லது துணைத்தலைவருக்கோ தமது அலுவல்களைக் கவனிக்க முடியாமல் போகும்போது தலைவர் தமது அதிகாரங்களில் சிலவற்றை தாம் விரும்பும் ஒரு அங்கத் தினருக்கு எழுத்து மூலம் பிரித்துக் கொடுக்கலாம். பஞ்சாயத்து தலைவரிடமிருந்து இப்படி அதிகாரம் பெற்ற வருக்கு பிரசிடென்ட் டெலிகேட் என்று பெயர். தலைவருக்கு உள்ள அதிகாரம் யாவும் இவருக்கும் உண்டு. 29. கூட்டத்துக்குத் தலைமை வகிப்பவர் என்ன செய்யலாம் ? ஒழுங்குப் பிரச்னையில் தலைவரின் தீர்ப்புக்குக் கட்டுப் படாத அங்கத்தினர்களை வெளியேறும்படி சொல்லலாம். கூட்டத்துக்கு வந்துள்ள பொது மக்களையோ அல்லது குறிப்பிட்ட நபரையோ வெளியேறும்படி கட்டளை இடலாம். சபையில் குழப்பமோ, கலவரமோ ஏற்பட்டால் போலீ சாரின் உதவியை நாடலாம். கூட்டத்தில் அமைதியை நிலை நாட்ட முடியவில்லை. யென்ருல் கூட்டத்தை ஒத்திப் போட்டுக் கலைத்து விடலாம். 30. தீர்மானங்களை பிரேரேபிப்பது எப்படி? நிகழ்ச்சி நிரலில் எந்த அங்கத்தினரின் பெயரால் தீர் மானம் குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அந்த அங்கத்தினரை தலைவர் அழைப்பார். உடனே அந்த அங்கத்தினர் எழுந்துநின்று தமது தீர்மானத்தைப் பிரேரேபிக்க வேண்டும். தீர்மானத்தின் இருத்தை விளக்கி, அவர் சுமார் அரை மணி நேரம் வரை ப்ேச் அனுமதிக்கப்படலாம். 3 、、 。"?