254 (2) தலைவரின் அனுமதியில்லாமல், அதை வாபஸ் செய்வதற்கான ஒரு பிரேரோணேயின் மீது எந்த விவாதமும் அனுமதிக்கப்பட மாட்டாது. 10. (1) ஏதேனும் ஒரு தீர்மானத்திற்கு ஒரு திருத்தம் கொண்டுவரப் பட்டால் அல்லது அத்தகைய திருத்தங்கள் அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டு கொண்டு வரப்பட்டால் தலைவர், அவற்றின்மீது பஞ்சாயத்து யூனியன் மன்றக் கருத்தை அறிவதற்கு முன்பு, அசல் பிரோனேயையும் உத்தேசிக்கப்பட்ட திருத்தம் அல்லது திருத்தங்களேயும், பஞ்சாயத்து யூனியன் மன்றத்திற்குக் கூற வேண்டும் அல்லது படித்துக் காட்ட வேண்டும். (2) சாதாரணமாக, திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட வரிசைக் கிரமப்படி அவற்றை, வாக்கெடுப்புக்குத் தலைவர் விட வேண்டும். ஆனால், அசல் பிரேரேரணையை முதலில் வாக்கெடுப்புக்கு விடுவதா அல்லது திருத்தங்களே முதலில் வாக்கெடுப்புக்கு விடுவதா என்பது பற்றி தலேவர் தம் விருப்பம் போல் நடந்து கொள்ளலாம். 11. பல விஷயங்கள் அடங்கிய ஏதேனும் ஒரு தீர் மானம் விவாதிக்கப்படும்போது தலைவர் தம் விருப்பப்படி தீர்மானத்தை பல விஷயங்களாகப் பிரித்து, அத்தகைய விஷயங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வாக்கெடுப் புக்கு விடலாம். 12. இந்த விதிகளில் தலைவர் ’ என்பதில், பஞ்சா யத்துச் சட்டத்தின் 37-வது பிரிவைச் சேர்ந்த (1), (2), (4), (3) அல்லது (6) உட்பிரிவின்கீழ் தலைவரின் பத விக்குத் தற்காலிகமாகப் பொறுப்பு வகிக்கும் நபர் என்பதும் அடங்கும். 12. அங்கத்தினர்கள் தலைவரை கேள்வி கேட்பது எப்படி? [ւ. տ. 178. (2) (6)յ விதிகள் 1. பஞ்சாயத்து யூனியனுக்குச் சம்பந்தப்படாத விவ காரங்கள் விஷயமாய் பஞ்சாயத்து யூனியன் மன்றக் கூட் டத்தில் எந்தக் கேள்வியும் கேட்கப் படக்கூடாது அல்லது அத்தகைய எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கப்படக் கூடாது. நிச்சயமாய் அறிந்த விஷயங்கள் பற்றியே கேள்விகள்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/740
Appearance