255 கேட்கப்பட வேண்டும். அவ்வாறே நிச்சயமாய் அறிந்த விஷயங்கள் மட்டுமே, பதிலில் அடங்கியிருக்க வேண்டும். பின்வரும் விதிகளில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்கும், வரையறைகளுக்கும் உட்பட்டு பஞ்சாயத்து யூனியன் மன்ற அங்கத்தினர் ஒருவர் எந்தக் கேள்வியையும் கேட்கலாம். 2. ஒரு கேள்வியைக் கேட்க விரும்பும் பஞ்சாயத்து யூனியன் மின்ற அங்கத்தினர் ஒருவர், பத்து நாட்களுக்கு முன்னதாக அது பற்றி எழுத்து மூலமாகத் தலைவருக்கு அறிவிக்க வேண்டும். அத்தகைய அறிவிப்புடன் தாம் கேட்க விரும்பும் கேள்வியின் நகல் ஒன்றை அவர் அனுப்ப வேண்டும். 3. ஒரு கேள்வி அனுமதிக்கப்பட வேண்டுமானல், அது அடியிற் கண்ட நிபந்தனைகளே அனுசரித்திருக்க வேண்டும் : (1) கேள்வி நன்ருகப் புரிவதற்குத் தேவையாய் இல்லாத ஒரு பெயரை அல்லது அறிக்கையை அது வெளி யிடக் கூடாது. (2) ஒரு கேள்வியில் ஒர் அறிக்கை அடங்கியிருந்தால், அந்தக் கேள்வியைக் கேட்கும் அங்கத்தினர் அந்த அறிக்கை சரியாய் இருப்பதற்குப் பொறுப்பாவார். (3) அதில் வாதங்கள், ஊகங்கள், நகைச்சுவையுள்ள சொற்கள் அல்லது அவமதிப்பான அறிக்கைகள் அடங்கி யிருக்கக் கூடாது. (4) மறைமுகமான ஏதாவது ஒரு சட்டப் பிரச்னை யைப் பற்றியோ அல்லது ஊகத்திற்கிடமான விஷயத்தைப் பற்றியோ கருந்து தெரிவிக்கும்படி அல்லது அதை தீர்த்து வைக்கும்படி கேள்வி கேட்கக் கூடாது. (5) யாரேனும் ஒரு நபரின் நடத்தையைப் பற்றி கேள்விகள் இல்லாமல் அலுவல் ரீதியில் அவரது காரியங் களேப் பற்றி கேள்விகள் இருக்க வேண்டும். - (6) கேள்வி மிகவும் நீளமாய் இருக்கக்கூடாது. (7) ஒருமுறை முழுவதும் விடையளிக்கப்பட்ட ஒரு கேள்வியை மீண்டும் கேட்கக்கூடாது. 4. ஒரு கேள்வி அனுமதிக்கப்படத்தக்கதா என்பதைத் தலைவர் முடிவு செய்யவேண்டும். அடுத்த கூட்டத்திற்காக
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/741
Appearance