உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/743

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257 8. கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அளிக்கப்பட்ட பதிலும் பஞ்சாயத்து யூனியன் மன்ற நடவடிக்கை குறிப்பு களில் குறித்துக் கொள்ளப்பட வேண்டும், 9. இந்த விதிகளில் வரும் தலைவர்?’ என்பதில் பஞ்சா யத்துச் சட்டத்தின் 37-வது பிரிவைச் சேர்ந்த (1), (2), (4), (5), (6) உட்பிரிவுகளிள்கீழ் தலைவர் பதவியைத் தற்காலிகமாக வகிக்கும் நபர் என்பது அடங்கும். 18. பதவியிலிருந்து வெளியேறும் தலைவர் முதலியோர்களிடமிருந்து பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் சொத்துக்களை ஏற்றுக்கொள்ளுதல் (ப. ச. 182. (3) விதி பஞ்சாயத்துச் சட்டத்தின் 182-வது பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவின் காரியங்களுக்கான நிர்ணய அதிகாரி பஞ்சாயத்து யூனியன் மன்றங்கள் விஷயமாக, அவற்றின் மீது விசாரணை அதிகாரம் வகிக்கும் டிவிஷனல் பஞ்சாயத்து அதிகாரி ஆவார். 14. நடவடிக்கைக் குறிப்புகள் அல்லது பதிவேடுகளின் நகல்கள் (ப. ச. 178. (2) (27) விதிகள் 1. ஒரு பஞ்சாயத்து யூனியன் மன்ற நடவடிக்கைக் குறிப்புகளின் அல்லது பதிவேடுகளின் நகல்களே அல்லது அவற்றிலிருந்து எடுத்து எழுதப்பட்ட பகுதிகளே ஒரு நபர் பெற விரும்பினால், அவர் கமிஷனருக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அவரது முழுப் பெயர், முகவரி, நடவடிக்கைக் குறிப்புகள் அல்லது பதிவேடுகள் பற்றி கூடிய் மட்டில் சரியான விவரம், இவற்றை அந்த விண்ணப்பத்தில் அவர் குறிப்பிட வேண்டும். நடைமுறை காலண்டர் ஆண்டுக்கு முந்திய ஆண்டுக்கு அத்தகைய நடவடிக்கைக் குறிப்புகள் அல்லது பதிவேடுகள் சம்பந்தப்பட்டு இருந்தால், கீழே குறிப்பிட்டுள்ள விகிதப்படி, தேடு கூலி ஒன்ற்ை மேற்படி விண்ணப்பம் அனுமதிக்கப்பட்டவுடன் பஞ்சாயத்து யூனியன் மன்றத்தில் செலுத்த வேண்டும் :