258 (a) ஒரே ஒரு தஸ்தாவேஜ" அல்லது பதிவுக்காக ஏதாவது ஒரு ஆண்டின் பதிவேடுகளேத் தேடுவதற்குஐம்பது காசுகள். - (b) அதிகப்படியான ஒவ்வொரு ஆண்டின் பதிவேடு களைத் தேடுவதற்காக-25 காசுகள். குறிப்புகள். (1) நபர்’ என்பதில் பஞ்சாயத்து யூனியன் மன்றத்தில் ஓர் அங்கத்தினர், துணேத் தல்வர் அல்லது தலைவர் என்பதும் அடங்கும். (2) ஒவ்வொரு நடவடிக்கைக் குறிப்பு அல்லது பதி வேட்டிலிருந்து நகல்கள் அல்லது எடுத்து எழுதிய பகுதி களைக் கேட்கத் தனித்தனி விண்ணப்பங்களேக் கொடுக்க வேண்டியதில்லே. (3) கடிதங்கள், கணக்குகள், அல்லது இதர தஸ்தா வேஜுகள் இவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளவை; சம்பந் தப்பட்ட தஸ்தாவே ஜூ களின் பாகமாகக் கருதப்படும். தேடு கூலியைக் கணக்கிடுவதற்காக அவைகளேத் தனித்தனி தஸ்தாவேஜுகளாகக் கொள்ளக்கூடாது. 2. பதிவேடு காணப்படாவிட்டால், செலுத்திய கட்ட ணம் திருப்பித் தரப்பட மாட்டாது. ஆல்ை, அந்தப் பதிவேடு காணப்படவில்லே என்று கூறும் ஒரு சான்றிதழ் விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும். 3. (1) பதிவேடு கண்டுபிடிக்கப்பட்டு, அதிலிருந்து நகல்களே அல்லது எடுத்து எழுதப்பட்ட பகுதிகளே வழங்க கமிஷனர் முடிவு செய்தால், ஒவ்வொரு 175 சொற்களுக்கு அல்லது அதன் பாகத்திற்கு 19 காசுகள் கட்டணத்தை விண்ணப்பதாரர் ரொக்கமாகக் கொடுக்க வேண்டும். (2) புள்ளி விவரங்கள் கொண்ட அறிக்கைகள் அல்லது பதிவேடுகளிலிருந்து எடுத்து எழுதப்படும் பகுதிகள் விஷயமாக ஐந்து இலக்கங்கள் ஒரு சொல்லுக்குச் சமமாக கருதப்பட வேண்டும். (3) தேசப் படங்கள் அல்லது வரை படங்கள் விஷய மாக ஒரு நியாயமான கட்டணத்தை கமிஷனர் நிச்சயிக்க வேண்டும். புஞ்சாயத்து யூனியன் வேலைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் என்ஜினியரிங் ஊழியருடன் கலந்தாலோசித்து அவர் அக் கட்டணத்தை நிச்சயிக்க வேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/744
Appearance