பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/747

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

261 வது தடை செய்யப்பட்டது என்பதைக் குறிப்பிட்டு தமி ழில் ஓர் அறிவிப்பை அந்த இடத்தில் ஒட்டி வைக்க கமி வடினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 4. மேற்படி சட்டத்தில் அல்லது அதன்கீழ் செய்யப் பட்ட விதிகளில் வெளிப்படையாக வகை செய்துள்ள வரை யிலன்றி மற்றபடி, மேற்படி சட்டத்தின்கீழ் ஒவ்வொரு அறி விப்பையும் அடியிற்கண்ட விதத்தில் வெளியிட வேண்டும். - (a) (i) பஞ்சாயத்து யூனியன் மன்ற அலுவலகத் திலும், (ii) கிராமம் அல்லது நகரத்தில் உள்ள சாவடி அல் லது சாவடிகளில் ஒரு முக்கியமான இடத்தில் ஒட்டி வைத்தல் ; (b) கிராமம் அல்லது நகரத்தில் தண்டோரா போடச் செய்தல். 5. இந்த விதிகளிலே ' மேற்படி சட்டம் ” என்பது சென்னேப் பஞ்சாயத்துச் சட்டடம் எனப் பொருள். 17. பொது ரஸ் தாக்களில் உள்ள தடங்கல்கள், ஆக்கிரமிப்புகளை தடை செய்தல் (ப.ச. 82) (ப.க. 178. (18) (34) (36)) விதிகள் 1. (1) பஞ்சாயத்து யூனியன் மன்றத்திடம் நிலே பெற்றுள்ள அல்லது அதற்குச் சொந்தமான ஒரு பொது ரஸ்தா அல்லது இதர அசையாச் சொத்திலிருந்து 20 கெஜ தூரத்துக்குள் இருக்கும் ஏதாவது ஒரு இடத்திலிருந்து எந்த நபரும் கல்லுடைக்கும் இடத்தில் வேலே செய்யக்கூடாது. அல்லது கல், மண் அல்லது இதர பொருளே அகற்றக்கூடாது. பஞ்சாயத்து யூனியன் மன்றத்திடமிருந்து லேசென்ஸைப் பெற்று, அவ்வாறு செய்யலாம். பஞ்சாயத்து யூனியன் மன்றம் அந்த லேசென்ஸை வழங்கலாம் அல்லது வழங்க மறுக்கலாம். லேசென்ஸை வழங்க மறுக்கும் விஷயங்களில் அதற்கான காரணங்கள், சம்பந்தப்பட்ட நபர்களுக்குத் தெரி விக்கப்பட வேண்டும். -