உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 பிறகு, இன்னுெரு அங்கத்தினர் தீர்மானத்தை ஆழோ திக்க வேண்டும். மேற்படி தீர்ம்ானத்தை யாரும் ஆமோதிக்க வில்லையானல் தீர்மானத்தைப்பற்றி மேற்கொண்டு எதுவும் விவாதிக்கக் கூடாது. எனவே, தீர்மானம் கொண்டு வருகிறவர் முன்னதாகவே அதை ஆமோதிக்க ஒருவரைத் தயார் செய்து கொள்வது அவசியம். தீர்மானம் குறித்து விவாதம் நடக்கும்போது ஒவ்வொரு அங்கத்தினரும் அதன் மீது 15 நிமிஷங்களுக்கு மேல் பேசக் கூடாது. தீர்மானத்துக்குச் சம்பந்தம் இல்லாத வேறு எதையும் பேசக்கூடாது. 31. திருத்தம் கொண்டு வருவது எப்படி? விவாதிக்கப்படும் தீர்மானங்களுக்கு எந்த அங்கத்தின ரும் திருத்தம் கொண்டு வரலாம். o அப்படிக் கொண்டு வருகிற திருத்தம் தெளிவாக இருக்க வேண்டும். அவதுTருக இருக்கக் கூடாது. திருத்தத்தை தலைவர் அனுமதித்தால்தான் கொண்டு வரலாம். . திருத்தத்தைக் கொண்டு வந்த அங்கத்தினர் தாம் விரும் பினல், தலைவர் அனுமதித்த பின், அதை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். வாபஸ் பெறப்பட்ட பிறகு அதன் மீது எவ் வித விவாதமும் கூடாது. 32. தீர்மானங்களே நிறைவேற்றுவது எப்படி? ஒரு தீர்மானத்தைப் பிரேரேபித்து ஆமோதித்து அதன் மீது விவாதித்த பிறகு தலைவர், 'இந்தத் தீர்மானத்தை நீங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்கிறீர்களா?’ என்று கேட்க வேண்டும். எல்லோரும் ஒப்புக்கொண்டால் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியதாக அர்த்தம். தீர்மானத்தின் மீது நடைபெறும் விவாதத்தின் போக்கைக் கொண்டே சபையினரின் கருத்தை தலைவர் புரிந்து கொள்ள முடியும்.