உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/753

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267 பந்தல்கள், இதர அமைப்புகளேத் தற்காலிகமாக நிறுவ லேசென்ஸ் வழங்கலாம். 6. மேற்படி கமிஷனர், பஞ்சாயத்து யூனியன் மன் றத்தின் அனுமதியுடன் பஞ்சாயத்து யூனியன் மன்றத்தில் நிலைத்துள்ள சாலேயோரங்களே அனுபோகத்திற்காகக் குத்த கைக்கு விடலாம். பஞ்சாயத்து யூனியன் மன்றம் நிச்ச யிக்கக்கூடிய நிபந்தனைகளுக்கும் வரையறைகளுக்கும் உட் பட்டும் மேற்படி மன்றம் நிச்சயிக்கக்கூடிய கால அளவுக்கும் மேற் சொன்னவாறு சாலேயோரங்கள் குத்தகைக்கு விடப்பட வேண்டும், - 7. ஆல்ை, சந்தர்ப்பத்திற்கு ஏற்ப, ஒரு பிதுக்கம், அமைப்பு அல்லது அனுபோகம் சுகாதாரத்திற்கு கேடு விளை விப்பதாக இருந்தால் அல்லது பொது மக்களுக்கு இடையூறு விளேவிப்பதாக இருந்தால், அல்லது சாலேயை உபயோகிப்ப தற்குத் தடையாக இருக்குமானல் 4-வது விதியின்கீழ் ஏதாவது ஒரு லேசென்ஸோ அல்லது -ேவது விதியின் கீழ் ஒரு குத்தகையோ வழங்கப்படக்கூடாது. 8. பஞ்சாயத்து யூனியன் மன்றம் அல்லது ஏதேனும் ஒரு வகையைச் சேர்ந்த பஞ்சாயத்து யூனியன் மன்றங்கள் 4, 6-வது விதிகளின் அதிகாரங்களேச் செலுத்துவதை, அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டு வரையறுக்கலாம் அல்லது அவர்கள் தகுதியெனக் கருதுகிற மேல்விசாரணைக்கு உட் படுத்தலாம். 9. மேற்படி கமிஷனர், 4 முதல் 6 வரையில் உள்ள விதிகளின்கீழ் வழங்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு லேசென்ஸ் அல்லது குத்தகையின் கால அளவு முடிவதன் மேல், 4-வது அல்லது 5-வது விதியின்கீழ் அமைக்கப்பட்ட ஒரு பிதுக்கம் அல்லது அமைப்பை முன்னறிவிப்புக் கொடுக்காமல் அகற்றும்படி செய்யலாம் ; அவ்வாறு அகற்றுவதற்கான செலவை லேசென்ஸ் வழங்கப்பெற்றுள்ள நபரிடமிருந்து வசூலிக்க வேண்டும். 10. (1) கமிஷனரின் எழுத்து மூலமான அனுமதியின்றி அல்லது அவரது அதிகாரம் பெற்றுள்ள இதர நபரின் எழுத்து மூலமான அனுமதியின்றி ஒரு சாக்கடை அல்லது வடிகாலின் மேல் அல்லது தெருக் குப்பைகள் அல்லது இதர குப்பைகளேப் பயன்படுத்தி மூடிய, உயர்த்திய அல்லது சமப்படுத்திய தரையின்மேல் எந்தக் கட்டிடத்தையும் கட்டக்கூடாது.