40 தீர்மானம் ஏகமனதாக நிறைவேழுது என்பதைத் தெரிந்து கொண்டதும் அதை ஒட்டுக்கு விட வேண்டும். "தீர்மானத்திற்கு ஆதரவாக இருப்பவர்கள் கை துரக்க வும் ' என்று தலைவர் சொல்ல வேண்டும். அப்போது கை தாக்குபவர்களுடைய தொகையை எண்ணி, அதை நடவடிக்கை குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பிறகு, தீர்மானத்தை எதிர்ப்பவர்களே கைதுரக்கச் சொல்லி, அந்த எண்ணிக்கையையும் குறித்துக் கொள்ள வேண்டும். அன்று கூட்டத்துக்கு வந்துள்ள அங்கத்தினர்களில் பெரும்பான்மையோர் ஆதரவாகக் கைதாக்கினால், தீர்மானம் நிறைவேறியதாக அர்த்தம். இல்லாவிட்டால் தோற்று விட்டதாக அர்த்தம். இதைத் தலைவர் உடனே சபைக்கு அறிவித்து விட வேண்டும். ஆதரவும் எதிர்ப்புமாகிய இரண்டுக்குமே கை தாக்காமல் இருப்பவர்கள் நடு நிலைமை வகிப்பதாகக் கருதப்படுவார் கள். 33. திருத்தங்களுடன் தீர்மானங்களே நிறைவேற்று வது எப்படி? சபையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்துக்குச் சுமார் நான்கு திருத்தங்கள் வருகின்றன என்று வைத்துக் கொள்வோம். அப்போது தீர்மானத்தை நிறைவேற்றுவது எப்படி? முதலில் அசல் தீர்மானத்தைப் பிரேரணை செய்து ஆமோதித்த பிறகு, ஒருவர் பின் ஒருவராக திருத்தங்களைப் பிரேரேபித்துப் பேசச் சொல்லவேண்டும். பிறகு ஓட் எடுக்கப் படும். ஒவ்வொன்முக திருத்தங்களை வாசித்து, அதன் மீது ஒட் எடுத்து, அது ஏற்றுக் கொள்ளப்பட்டதா, நிராகரிக்கப் பட்டதா என்பதை அவ்வப்போதே அறிவித்து விடவேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/76
Appearance