பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/760

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 3, ராஜிளுமா பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அலுவலர்கள் அல்லது ஊழியர்கள், சிலர் லாபமடைவதற்காகத் தொகை பெற்றுக்கொண்டு ராஜினமா செய்யக்கூடாது. இந்த விதியை மீறில்ை அத்தகைய ராஜினுமாவின் விளேவாகச் செய்த நியமனம் ரத்து செய்யப்படும். இந்த ராஜினுமா ஒப்பந்தத்தில் பங்கு கொண்டு ஊழியத்தில் இருந்துவரும் மற்ற நபர்கள், கமிஷனரின் மறு உத்தரவுவரை, வேலையி லிருந்து தள்ளி வைக்கப்படுவார்கள். 4. பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அலுவலர்கள், ஊழியர்கள் வைத்திருக்கும் அல்லது புதிதாகப் பெற்றிருக்கின்ற அசையாச் சொத்துகளைக் குறித்த மேல்விசாரணை பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் ஒவ்வொரு அலுவ லரும் அல்லது ஊழியரும் அல்லது மன்றத்தில் பணி புரிய விரும்பும் ஒவ்வொரு நபரும் தாம் வைத்திருக்கும் அல்லது தாம் அவ்வப்போது புதிதாகப் பெறுகின்ற அல்லது தமது மனேவி, அல்லது குடும்பத்துடன் வசித்து தம்மையே. நம்பி யுள்ள உறுப்பினர் வைத்திருக்கும் அல்லது புதிதாகப் பெறுகின்ற அசையாச் சொத்துகள்பற்றிய தகவல்களே கமிஷனருக்குத் தெரிவிக்க வேண்டும். அந்த அறிக்கையில் அந்தச் சொந்து எந்த மாவட்டத்தில் உள்ளது என்பது பற்றியும், பஞ்சாயத்து யூனியன் மன்றம் பொது அல்லது விசேஷ உத்தரவின் மூலம் கேட்கக்கூடிய இதர தகவல்களும் கண்டிருக்க வேண்டும். இந்த விதி, பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் உயர் நிலை ஊழியத்தில் உள்ள அலுவலர்களுக்கும், ஊழியர் களுக்கும் இந்த நிலையில் பணி புரிய விரும்பும் நபர்களுக்கும் மட்டுமே பயன்படும். உயர்நிலை ஊழியம்? என்பது, பஞ்சா யத்து அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் பஞ்சாயத்து கிராஜுயிடி தருவதுபற்றிய விதிகளில் வரையறுக்கப்பட் டுள்ளது. குறிப்புகள் (i) இந்தியாவில் எந்தப் பாகத்திலும் தாம் வைத் திருக்கும் அல்லது பெற்றுள்ள ஆசையாச் சொத்து அ&னத் தையும் பற்றி இந்த அறிக்கையில் கண்டிருக்க வேண்டும்