உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/774

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 நிறுவனங்களில் வேலைக்காக விண்ணப்பித்துக் கொள்ளக் கூடாது அல்லது அத்தகைய வேலேயை ஒப்புக்கொள்ளத் தாம் விரும்புவதைக் குறிப்பிடவும் கூடாது. (2) (a) ஒய்வு பெறுவதற்கு முன் ஜீவு எடுத்திருக்கும் ஒரு நபருக்கு தனியார் நிறுவனத்தில் ஆேலே பெறுவதற்கு விண்ணப்பிக்க அல்லது வேலேயை ஏற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்படும். ஆனால், மேற்படி வேலே இந்தியாவிலுள்ள ஒரு வர்த்தக நிறுவனத்தைச் சேர்ந்ததாக இருத்தலாகாது. இந்தியாவிலுள்ள ஒரு வர்த்தக நிறுவனத்தில் வேலேக்காக விண்ணப்பித்துக்கொள்ளவும், வேலேயை ஏற்றுக்கொள்ளவும் மிகவும் பிரத்தியேகமான விஷயங்களில் மாத்திரம் அனுமதி வழங்கப்படும். அவ்வாறு அனுமதி வழங்குவது, சம்பந்தப் பட்ட பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் வேலேகளிலிருந்து மேற்படி அலுவலர் அல்லது ஊழியர் உடனடியாக ஓய்வுபெற வேண்டும் என்னும் நிபந்தனேக்கு உட்பட்டதாகும். (b) பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் வேறு எந்த அலுவலர் அல்லது ஊழியருக்கும் தனியார் நிறுவனத்தில், வேலைக்காக விண்ணப்பித்துக் கொள்வதற்காக அல்லது வேலையை ஒப்புக்கொள்வதற்காக அனுமதி வழங்கப்பட மாட்டாது. ஆல்ை, அவர் முன்னதாகவே வேலேயை ராஜிநாமா செய்வதல்ை பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அலுவல்களுக்குப் பாதகம் எதுவும் ஏற்படாது என்று கமிஷனர் திருப்திகரமாகத் தெரிந்து கொண்டால், அனுமதி அளிக்கப்படும். (3) தனியார் நிறுவனத்தில் வேலேக்காக விண்ணப் பித்துக்கொள்ள அல்லது வேலையை ஒப்புக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட ஒரு நபர் பஞ்சாயத்து யூனியன் மன்றத்தில் தனது நியமனத்தை ராஜிநாமா செய்ய விரும்பில்ை, அந்த ராஜிநாமாவை சாதாரணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். (4) ஓய்வு பெறுவதற்குமுன் லீவில் இல்லாத ஒரு நபருக்கு, தனியார் நிறுவனத்தில் வேலேக்காக விண்ன்ப் பித்துக்கொள்ளவோ அல்லது வேலையை ஒப்புக்கொள்ளவோ அனுமதி அளிக்கப்பட்டால், அவர் அந்த வேலே ஒப்புக் கொண்டதும் உடனடியாக ப்ஞ்சாயத்து யூனியன் மன்றத்தில் தமது நியமனத்தை ராஜிநாமா செய்ய வேண்டும்.