பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/779

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

293 கேட்டுச் செய்து கொள்ளும் கோரிக்கையை கமிஷனர் சம்பளம் கொடுப்பதற்கு முன்னதாக, (i) ஆறு மாதங்களுக்கு மேற்பட்டு, ஆளுல் இரண்டு ஆண்டுகளுக்கு மேற்படாத கால அளவைக் குறித்த கோரிக்கைகளின் விஷயத்தில் பஞ்சாயத்து யூனியன் மன்ற அனுமதியுடனும், (ii) இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோரிக்கை களின் விஷயத்தில் பஞ்சாயத்து யூனியன் மன்றம், கலெக்டர் ஆகியோரது அனுமதியுடனும் பரிசீலிக்க வேண்டும். (2) பிரயாணம் மேற்கொண்டு மூன்று மாதங்கள் பூர்த்தியான பின்பு பிரயாணப்படி கேட்டுச் செய்து கொள் ளும் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. பிரயாணப் படி கோரிய பிரயாணம் முடிந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு கொடுக்கப்படும் பிரயான பில்லில் மேற் கையொப்ப மிடும் அதிகாரிகள் அதில் கையொப்பமிடாமல் மறுத்துவிட வேண்டும். 2. சம்பளம் குறைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது எனக் கண்டுபிடித்த தேதிக்கு அடுத்து முந்திய ஓர் ஆண்டு கால அளவில் கோரிக்கையின்படி உண்மையில் சேர வேண்டிய பாக்கித் தொகைக்கு, 1-வது விதியின்கீழ் உத்தரவு இட்ட கோரிக்கைப் பாக்கி அதிகப்படக்கூடாது. குறிப்பிட்ட நபர் விஷயத்தில் விசேஷ காரணங்களே முன்னிட்டு விசேஷ சலுகை கொடுப்பதா யிருந்தால் கமிஷனர், முதலாவதாக ஸ்தல ஸ்தாபன நிதிக் கணக்குப் பரிசோதகரைக் கலந்து அவர் கூறுவதன்மேல் கலெக்டரின் அனுமதியோடு ஓர் ஆண்டுக்கு மேற்பட்ட கால அளவுக்கு உரிய பாக்கித் தொகைகளேக் கொடுக்கலாம் : ஆனால், இருபத்தைந்து ரூபாய்க்கு மேற்படாத பாக்கிக் கோரிக்கை விஷயத்தில், ஸ்தல ஸ்தாபன நிதிக் கணக்குப் பரிசோதகரைக் கலந்தாலோசிக்க வேண்டியதில்லே. விளக்கம் இந்த விதியின் காரணமாக, தொகை குறைத்துக் கொடுத்திருக்கிறது என்பதைக் கண்டு பிடித்த தேதி என்பது, தொகை குறைத்துக் கொடுத்திருக்கிறது எனக் கண்டு பிடித்து கமிஷனரின் கவனத்துக்குக் கொண்டுவந்த தேதி அல்லது தணிக்கையில் கண்டு பிடித்திருந்தால், தனிக்கை