பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 இந்த வேண்டுகோளின்படி தலைவர் கூட்டத் தவறிஞல் மேற்படி அங்கத்தினர்களே இதர அங்கத்தினர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து கூட்டத்தைக் கூட்டலாம். 38. கேள்விகள் கேட்பது எப்படி ? கூட்டத்தில் கேள்வி கேட்பதற்கு அங்கத்தினர்களுக்கு உரிமை உண்டு. திடீரென்று கூட்டத்தில் எழுந்து எதையாவது கேட்க லாமா? கூடாது. அதற்கு ஒரு முறை உண்டு.

  • இந்த மாதிரி ஒரு கேள்வியை நான் கூட்டத்தில் கேட்கப் போகிறேன்’ என்று கூட்டம் நடைபெறுவதற்குப் பத்து தினங்கள் முன்பே தலைவருக்கு எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். அதில் கேள்வி தெளிவாக எழுதப் பட்டிருக்க வேண்டும்.

சில சந்தர்ப்பங்களில் கேள்விகளுக்கு நோட்டிஸ் வேண் டும் என்று கூட்டத்தின் தலைவர் சொல்லுவதற்குக் காரணம் சம்பந்தப்பட்ட கேள்விக்கு சரியான விவரம் அறிந்து, தகுந்த பதில் சொல்வதற்காக இருக்கலாம். 37. கேள்விகள் எப்படி இருக்க வேண்டும் ? கேள்வி தெளிவாக இருக்க வேண்டும். அநாவசியமான விஷயங்கள் அதில் இருக்கக்கூடாது. ஒரு விஷயம் பற்றிக் கேள்வி கேட்பதற்கு முன்ஞல் அந்த விஷயம் உண்மைதான என்பதை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு பொறுப்புடன் கேள்வி கேட்க வேண்டும். கேள்வியிலே எவ்வித அனுமானமும் இருக்கக் கூடாது. கேலியான வார்த்தைகள் இருக்கக் கூட்ாது. அபிப்பிராயம் கூறும்படியோ, தனிப்பட்டவர்களின் ஒழுக்கம் பற்றியோ ஏதும் கேட்கக் கூடாது. பொதுத் தன்மையானதாகவும், சுருக்கமாகவும் இருக்க வேண்டும், ஒரு கேள்விக்கு ஒரு தரம் பதில் அளிக்கப்பட்ட பிறகு மீண்டும் அதே கேள்வியை கேட்கக்கூடாது. பஞ்சாயத்துக்கு சம்பந்தம் இல்லாத விஷயம் குறித்துக் கேள்விகள் கேட்கக் கூடாது.