300 4. பஞ்சாயத்து யூனியன் மன்றம், தொகைகளைத் தள்ளுபடி செய்ய அனுமதிக்கும்போது, அதைப்பற்றிய இனங்கள், தள்ளுபடி செய்யப்பட்ட தொகைகளேக் குறிக்கும் பதிவேட்டில் குறிக்கப்பட வேண்டும். வரி, கட்டணம் அல்லது வேறு தொகை, (வரி சம்பந்தப்பட்ட இனங்கள் இருந்தால், தீர்வை எண்ணும்கூட) தள்ளுபடி செய்யப்பட்ட தொகை, அந்தத் தொகை எந்தக் கால அளவுக்கு உரியது என்ற விவரங்கள் குறிப்புப் புத்தகத்தில் விவரமாகக் கொடுக் கப்பட வேண்டும்; அல்லது பஞ்சாயத்து யூனியன் மன்றம் விரும்பினால், தள்ளுபடி செய்யப்பட்ட தொகைகள் குறிக்கப் படும் பதிவேட்டிலுள்ள வரிசை எண்ணுக்கு மட்டும் குறிப்புத் தரப்படலாம். ஒவ்வொரு சமயத்திலும் அதிகாரம் பெற்றுத் தள்ளுபடி செய்யும் மொத்த தொகையை ஒவ்வொரு சந்தர்ப் பத்திலும் எழுத்தால் குறிப்பிட வேண்டும் - 5. தள்ளுபடி செய்யப்பட்ட வரிகள், கட்டணங்கள் அல்லது வேறு தொகைகள் ஆகியவைகளுக்கான பட்டியல் களும், வாரண்டுகளும் (இரண்டிலும்,அடிக்கட்டைச் சீட்டும் முதல் சீட்டிலும்) தள்ளுபடி செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட பின், முடிந்த அளவு உடனடியாக, 'தள்ளுபடி செய்யப் பட்டவை’ என்று முத்திரையிடப்பட வேண்டும்; கோரிக் கைப் பதிவேடுகளில் (டிமாண்ட் ரிஜிஸ்டர்) அதே சமயத்தில் தேவையான பதிவுகளேச் செய்யவும் வேண்டும். 6. வசூலிக்க முடியாதது என தள்ளப்படும் வரி, கட்டணம் அல்லது வேறு தொகையின் தனி இனம், ரூபாய் 50-க்கு மேற்பட்டால் அதற்காக இன்ஸ்பெக்டரின் அனுமதி யைப் பெற வேண்டும். 27. குத்தகைக்காரர்களுக்கும் ஒப்பந்தக் காரர்களுக்கும் வரி வஜா செய்தல் (ப.ச.178, (2) (18)] விதிகள் 1. பஞ்சாயத்து யூனியன் மன்றத்தினிடமிருந்து குத் தகை பெற்ற எல்லா குத்தகைக்காரர்களும், பஞ்சா யத்து யூனியன் மன்றங்களுடன் ஒப்பந்தம் செய்து
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/786
Appearance