310 (c) சந்தையை நல்ல காற்றேட்டமுள்ளதாகவும், தண்ணிர் வசதி உள்ளதாகவும் செய்தல்; (d) ஸ்டால்களுக்கு மத்தியில் செல்வதற்கு போது மான இடைவெளி விடுதல்; அந்தச் சந்தையின் ஸ்டால் களில், நடைவழிகளில், கடைகளில், கதவுகளில் அல்லது இதர பகுதிகளில் பஞ்சாயத்து யூனியன் மன்றம் கட்டளை யிடக்கூடிய மாறுதல்களேச் செய்தல்; (e) சந்தையை சுத்தமாக, தகுந்த நிலேயில் வைத் திருத்தல்; அதிலிருந்து குப்பை கூளங்களே அகற்றுதல்; அவற்றை பஞ்சாயத்து யூனியன் மன்றம் கட்டளேயிடக்கூடிய இடத்திலும் முறையிலும் வகை செய்தல்; () பஞ்சாயத்து யூனியன் மன்றம் அவசியம் எனக் கருதுகிற மற்ற துப்புரவுகளைச் செய்தல். - 3. இது விஷயமாய் பஞ்சாயத்து யூனியன் மன்றத்திட மிருந்து அறிவிப்புப் பெற்றிருக்கிற நபர், 2-வது விதியில் குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு வேலேயை, அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள கால அளவுக்குள்ளும், அதில் விதித்துள்ள முறையிலும் நிறைவேற்றத் தவறில்ை, பஞ்சாயத்து யூனியன் மன்றம், அந்த நபரின் லேசென்ஸ்ை செல்லுபடியாகாமல் சில காலம் நிறுத்தி வைக்கலாம் அல்லது அந்த வேலை செய்து முடிக்கப்படுகிற வரையில் அவருக்கு லேசென்ஸ் கொடுக்க மறுக்கலாம். 4. அவ்வாறு லேசென்ஸ் சிறிது காலம் நிறுத்தி வைக் கப்பட்டிருக்கையில், அல்லது லேசென்ஸ் புதுப்பிக்கப்படுகிற வரையில் யாரேனும் ஒரு நபர் தனியார் சந்தையைத் திறந்து வைத்திருத்தல் சட்ட சம்மதம் ஆகாது. 5. ஏதாவது ஒரு தனிப்பட்ட சந்தையின் அல்லது அதிலுள்ள ஒரு கடையின், ஸ்டாலின், கூடத்தின் அல்லது இதர இடத்தின் சொந்தக்காரர், ஏஜெண்டு அல்லது அதன் பொறுப்புள்ள நிர்வாகி எவரும் அது ஒரு தொந்தரவாய் இருக்கும் வரையில் அதை வைத்திருக்கக் கூடாது அல்லது தொந்தரவாயிருக்கக் கூடிய எதையும் பஞ்சாயத்து யூனியன் மன்றம் குறிப்பிடக்கூடிய இடத்திற்கு உடனடியாக அகற்று வதறகு தவறககூடாது.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/796
Appearance