44 கேள்வி பத்து தினங்களுக்கு முன்பே தலைவருக்குத் தெரிவிக்கப்பட்டு விடுகிறது அல்லவா ? அதனுல் அவர் தன்ருக விசாரித்து, தேவையான தஸ்தாவேஜூகளைப் பார்வையிட்டு, அதன் பிறகு தாம் சொல்லவேண்டிய் பதில்களே திச்சயப் படுத்திக் கொள்ளலாம். கேள்விகளையும் அதற்களித்த பதில்களேயும் நடவடிக்கைக் குறிப்புப் புத்தகத்தில் பதிய வேண்டியது அவசியம். 41. கேள்விகளை நிராகரிக்கலாமா? கேள்விக்குப் பதில் சொல்லவும், அதை நிராகரிக்கவும் தலைவருக்கு அதிகாரம் உண்டு. கேள்வியானது முறைப்படி இல்லை என்று தலைவர் கருதி ல்ை அதை நிராகரித்து விடலாம். குறிப்பிட்ட ஒரு கேள்விக்குப் பதில் சொல்வதால் பொது நலன் பாதிக்கப்படும் என்று தலைவர் அபிப்பிராயப்பட்டால் அந்தக் கேள்வியை நிராகரித்து விடலாம், கேள்வி கேட்கும் உரிமையைத் துஷ்பிரயோகம் செய்து, ஏதோ ஒரு மறைமுகமான நோக்கத்துடன் கேட்கப் படுவதாகத் தோன்றிஞலும் தலைவர் மேற்படி கேள்வியைத் தள்ளி விடலாம். நிராகரிக்கப்படும் கேள்விகளைக் குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்யக்கூடாது. எந்தக் கூட்டத்தில் கேள்வி கேட்கப் போவதாக தோட் டிஸ் தெரிவிக்கப்பட்டுள்ளதோ அந்தக் கூட்டத்துக்கு முன்ன தாகவே தலைவர் அந்தக் கேள்வியை நிராகரித்து விட்டாரா அல்லது பதில் சொல்லப் போகிருரா என்பதைத் தெரிவித்து விட வேண்டும். 42. அங்கத்தினர்கள் எப்போது விவாதத்தில் கலந்துகொள்ளக்கூடாது. பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அல்லது அவை சம்பந்தப்பட்ட ஒரு கமிட்டியில் ஒரு விஷயம் விவாதத் துக்கு வருவதாக வைத்துக் கொள்வோம். அந்த விஷயத்தில் ஒரு அங்கத்தினருக்கு பணம் சம்பந்தப் :பட்ட பாத்தியதை இருக்குமானல் அவர் அந்த விவாதத்தில் கலந்து கொள்ளக்கூடாது. ஒட் அளிக்கவும் முடியாது. -
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/80
Appearance