318 காரம் அளிக்கப்பட்டுள்ள சகல நபர்களும், மேற்படி சட்டத் தின்கீழ் நியமிக்கப் பெற்றவர்களும் தங்களுடைய அதிகார வரம்பிற்குள் அடங்குகிற விஷயங்களே விசாரனே செய்ய வர்களுமான தணிக்கையாளர்கள், பார்வையிடும் அலுவலர் கள், மேற்பார்வையிடும் அலுவலர்கள் அனேவரும் விசாரனே நடத்தும் காரியத்துக்காக அடியிற் கண்ட அதிகாரங்களே உடையவராவார்: (i) விசாரணையிலிருக்கிற ஒரு விஷயத்தை விசா ரிப்பதற்கு, அந்த ஜில்லாவில் வசிப்பவர் எவருடைய சாட் சியம் அவசியம் எனத் தங்களுக்குத் தோன்றுகிறதோ, அவரை சம்மன் அனுப்பி வரவழைத்தல்; விசாரணையி லிருக்கும் விஷயத்திற்குப் பொருத்தமான தஸ்தாவேஜ" எதுவும் அந்த நபரின் சுவாதீனத்தில் அல்லது கட்டுப் பாட்டில் இருந்தால், அதைக் கொண்டுவரும்படி உத் தரவிடுதல்; (ii) சிவில் நீதி மன்றம், சம்மன் அனுப்பி வர வழைத்த சாட்சிக்குக் கொடுக்கத்தக்க படியை, அந்த நப ருக்குக் கொடுத்தல்; அந்தப் படியை யார் கொடுக்க வேண்டும் அல்லது எந்த நிதியிலிருந்து கொடுக்க வேண்டும் என்பது குறித்து உத்தரவு பிறப்பித்தல்; 2. அந்த சம்மன் எழுத்து மூலமானதாக இருக்க வேண்டும். அதைப் பிறப்பிக்கிற அலுவலர் கையொப்ப மிட்டிருக்க வேண்டும். அவருக்கு, முத்திரை ஏதேனும் இருந்தால் அதை அதில் பதிய வேண்டும். சம்மன் அனுப்பப்பட்ட நபர், அந்த உத்தரவில் குறிப் பிட்டுள்ள நேரத்திலும் இடத்திலும் வந்திருக்க வேண்டும் என அதில் கட்டளேயிட்டிருக்க வேண்டும்; சாட்சியம் கொடுப்பதற்காக வர வேண்டியிருக்கிறதா தஸ்தாவேஜு கொண்டுவருவதற்காக வர வேண்டியிருக்கிறதா அல்லது இரண்டு காரியங்களுக்காகவும் வரவேண்டியிருக்கிறதா என்பதை அதில் குறிப்பிடவேண்டும்; எந்த தஸ்தாவேஜக வேண்டியிருக்கிறதோ அதை அந்த சம்மனில் விவரித்திருக்க வேண்டும். 3. சம்மன் பெறுபவருக்கு, அதை நேரிலே அவ ரிடம் சேர்ப்பிக்க வேண்டும் அல்லது அவர் இருப்பிடத் தில் காணப்படா விட்டால், அவருடன் வசித்து வருகிற அவருடைய குடும்பத்தினருள் வயது வந்த ஒருவரிடம் அதைக் கொடுத்து அவரிடம் சேர்ப்பிக்கச் சொல்லலாம்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/804
Appearance