323 2. 1-வது விதியின்கீழ், கமிஷனர் அனுப்பும் சம்மனே அனுசரித்து நடக்க எவரேனும் தவ்றில்ை அவருக்கு பத்து ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். ... " 40. முத்திரையை உபயோகித்தல் [ւ. Ժ. 128. (2) (26)] விதிகள் 1. பஞ்சாயத்து சட்டம் அல்லது அதன்கீழ் செய்யப் படும் விதி, துனேவிதி அல்லது நடை முறைகளின்கீழ் கமிஷனர் அல்லது பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் ஒரு அலுவலரது கையொப்பம் ஒவ்வொரு லேசென்சில், அனு மதியில், அறிவிப்பில், பில்லில், அட்ட்வணேயில், சம்மனில் அல்லது இதர தஸ்தாவேஜியில் கண்டிருக்க வெண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், சந்தர்ப்பத்திற்கேற்ப, கமிஷனர் அல்லது அத்தகைய அதிகாரியின் முத்திரைக் கையொப்பம் அதில் கண்டிருந்தால் அது முறைப்படிக் கையொப்பமிடப்பட்டிருப்பதாகக் கருதப்படும். 2. பஞ்சாயத்து யூனியன் நிதி விஷயமாக எழுதப்படும் செக்கிற்கு அல்லது பஞ்சாயத்து யூனியன் மன்றம் எழுதிக் கொடுக்கும் ஒப்பந்தப் பத்திரத்திற்கும் 1-வது விதியில் கண்டுள்ள எதுவும் பயன்படாது. 41. துணைவிதிகளைத் தயாரித்தல் (ப. ச. 180.) விதிகள் 1. பஞ்சாயத்து யூனியன் மன்றம், துணைவிதிகளைச் செய்வதற்கு அல்லது திருத்துவதற்கு முன்பு, உத்தேச மசோதா துனே விதிகளே அல்லது மசோதா திருத்தங்களே வெளியிட வேண்டும். அந்த மசோதா எந்தத் தேதியன்று அல்லது எந்தத் தேதிக்குப் பிறகு ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதைக் குறிப்பிட்டு ஓர் அறிக்கையும் வெளியிட வேண்டும். மேலும் பஞ்சாயத்து யூனியன் மன்றம் துணைவிதிகளே அல்லது திருத்தங்களேச் செய்வதற்கு முன்பு,
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/809
Appearance