45 ஒரு அங்கத்தினருக்கு இத்தகையபாத்தியதை இருப்பதாக கூட்ட்த்துக்குத் தலைம்ை வகிப்பவர் கருதினால் அவர் மேற்படி அங்கத்தினரை விவாதத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று சொல்லலாம். சபையில் இருக்கக்கூடாது என்றும் கூறலாம், சம்பந்தப்பட்ட அங்கத்தினர் இதை ஆட்சேபித்தால் அதுகுறித்து சபையினர் செய்யும் முடிவே இறுதியானது. 43. ஒழுங்கு பிரச்னை என்ருல் என்ன? சபை நடவடிக்கைகள் ஏதாவது ஒழுங்குமுறை தவறி யிருந்தால், அதை அங்கத்தினர் எவரேனும் தலைவரின் கவ ளத்துக்குக் கொண்டு வரலாம். இதற்குத்தான் ஒழுங்குப் பிரச்னை என்று பெயர். இதை அங்கத்தினர்கள், தலைவருக்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்பதில்லை. தலைவரும் அம்மாதிரி அங்கத்தினர் களுக்கு எடுத்துக் காட்டலாம். கட்டத்தின் ஆரம்பத்திலாவது, மத்தியில் எப்போதாவது கோரம் இல்லை. கூட்டத்தை நடத்தக் கூடாது என்று ஒரு அங்கத்தினர் எழுந்து தலைவருக்குத் தெரிவிப்பதாக வைத்துக் கொள்வோம். இதைத்தான், அங்கத்தினர் ஒழுங்குப் பிரச்னையை எழுப்புகிருர் . என்று சொல்வது. 44. ஒழுங்கு பிரச்னை எழுப்புவது எப்படி? கூட்டத்துக்கான நோட்டிஸ் கிரமப்படி இல்லை என்று: வைத்துக் கொள்வோம். போதிய அவகாசம் இல்லாமல் நோட்டீஸ் கொடுத்திருக்கலாம். இத்தகைய தவறுதலை எவராவது ஒரு அங்கத்தினர் தலைவருக்கு எடுத்துக் காட்ட லாம். கூட்டம் ஒழுங்காகக் கூட்டப்படவில்லை என்று சொல் லலாம். கோரம் இல்லாதிருக்கலாம்; அதை சபைத் தலைவர் சுட்டிக் காட்டிலுைம் சரி, அங்கத்தினர் எவரேனும் தலைவரு டைய கவனத்துக்குக் கொண்டு வந்தாலும் சரி. இவை யெல்லாம் ஒழுங்குப் பிரச்னைதான் ! யாராவது ஒரு அங்கத்தினர் சபையில் பேசிக்கொண்டு. இருக்கும்போது அவர் சொல்லுகிற விஷயமோ இ
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/81
Appearance