பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/821

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

335 () பஞ்சாயத்து யூனியன் ஊழியரும் வளர்ச்சித் திட்ட ஊழியரும், எந்த விதத்தில் தெரிந்தெடுக்கப்படுவர்" (c) அந்த இருவகை ஊழியருக்கும், என்ன சம்பளங் களும், படிகளும் வழங்கப்படும்; (b) அந்த இருவகை ஊழியருக்கும் உண்டாகும் செலவு எவ்வாறு சரிக்கட்டப்படும்? இது காரியத்திற்காக, தற்போதுள்ள முறையை அனு: சரித்து ஊழியர்களே கணக்கிட்டு தற்போது செய்வதைப் போல் செலவைப் பங்கிட்டுக் கொள்வது போதுமானதல்ல; மேற்சொன்ன விஷயங்கள் சம்பந்தமாக இருவகை ஊழியரின் நிலைமையை விளக்கி அடியிற்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன: 3. பஞ்சாயத்து யூனியன் கமிஷனர் ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் மன்றம் விஷயமாகவும் கமிஷனர் ஒருவரை அரசாங்கத்தினர் நியமிக்க வேண்டும் என்று மேற்படிச் சட்டத்தின் 44-வது பிரிவு வகை செய் கின்றது. சமுதாய அபிவிருத்தியின் தேசீய வளர்ச்சிப் பணித்திட்டத்தை அனுசரித்து, ஒவ்வொரு பஞ்சாயத்து வளர்ச்சி வட்டாரத்திற்காகவும், நியமிக்கப்பட்ட அபிவிருத்தி அதிகாரியாக சாதாரணமாய் அந்த கமிஷனர் இருக்க வேண்டும் என்றும் ஒரு கமிஷனருக்கு வழங்கப்படும் சம்பளமும், படிகள் இவை காரணமாக அல்லது அவரது லிவ், படிகள், ஒய்வு உதவித் தொகை, எதிர்காலச் சேமிப்பு நிதி, இவை காரணமாகவும் பஞ்சாயத்து யூனியன் மன்றத் திடமிருந்து எந்தத் தொகையையும் வசூலிக்ககூடாதென்றுங் கூட மேற்படிச் சட்டத்தின் 44-வது பிரிவு கூறுகிறது. ஒரு பஞ்சாயத்து யூனியன் அமைக்கப்பட்டு, பஞ்சாயத்து யூனியன் மன்றம் அமுலுக்கு வரும்போது அந்தந்த வட்டா ரத்தின், வட்டார அபிவிருத்தி அலுவலரை, பஞ்சாயத்து யூனியன் கமிஷனராக நியமித்து அரசாங்கத்தினர் உத்தரவு பிறப்பிப்பார், - - 4. இதர அலுவலக ஊழியர்கள் அலுவலர்களின், ஊழியர்களின் எண்ணிக்கையையும், பதவிப் பெயரையும், தரத்தையும் நிச்சயிப்பது அல்லது மாற்றுவது, அவர்களுக்குக் கொடுக்கத்தக்க சம்பளங்கள்,