341 கீழ்ப் பிரிவு குமாஸ்தாக்களே நியமிக்கையில் அடியிற்கண்ட நடைமுறையை மேற்கொள்ள வேண்டும். வேலை பெற விழையும் நபர்களே அலுவலர்கள் கொண்ட தனிக் கமிட்டி ஒன்று பரிசீலனை செய்ய வேண்டும். இந்தக் கழிட்டியில் விசேஷ அதிகாரியும் தனி உதவியாளரும் கலெக்டரின் தனி உதவியாளர்களில் ஒருவரும் சம்பந்தப்பட்ட டிவிஷனைச் சேர்ந்த ரெவின்யூ டிவிஷனல் அதிகாரியும் இருக்கு வேண்டும். பஞ்சாயத்து யூனியன்கள் செயலாற்றத் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே உள்ழியர்களே நியமிக்க வேண்டும். ஏனெனில், அவர்களுக்கு மாவட்டக் கழக அலுவலகங்களில் பயிற்சி கொடுக்க வேண்டியுள்ளது, பயிற்சி கொடுத்த பின்னர், அவர்கள் பல்வேறு யூனியன் அலுவலகங்களில் தனிப்பட்ட பிரிவாகச் செயல்படத் தொடங்குவர். மானேஜரும் கணக்கரும் 1960-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதியன்று மாவட்டக் கழக அலுவலகங்களில் செயலாற்றத் தொடங்குவர் 10. பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை மூன்று பிரிவுகளாக அமைத்தல் 5-வது முதல் 9-வது பாரா வரையில் குறிப்பிட்டுள்ள ஊழியர்கள், ஒருங்கே இணைந்த பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் மூன்று தனிப்பட்ட பிரிவுகளாகச் செயல்பட வேண்டும் : 1. பொது நிர்வாகப் பிரிவு (1) மானேஜர். (2) மேல்பிரிவு குமாஸ்தாக்கள்-இருவர். (3) கீழ்ப்பிரிவு குமாஸ்தா-ஒருவர் (பஞ்சாயத்துகள் சம்பந்தமான வேலேக்காக). - (4) கீழ்ப்பிரிவு குமாஸ்தா-ஒருவர் (பொதுக் கடிதப் போக்குவரத்து-பஞ்சாயத்து யூனியன் மன்ற வேலேக்காக). (5) காஷியர்-ஒருவர் (கீழ்ப்பிரிவு குமாஸ்தா சம்பள விகிதம்). . . . . . - (6) டைப்பிஸ்ட்-ஒருவர் (இவர் தபால் வேலையும் கவனிக்க வேண்டும்). ". (7) அலுவலக அட்டெண்ட்ர்-ஒருவர். (8) அட்டெண்டர் (ரிகார்டு)-ஒருவர்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/827
Appearance