347 இடங்களுக்கு ஏற்ப வசதியான தொகுதிகளில் அவர்கள் பயிற்சி பெற அனுப்பப்படுகின்றனர். (8) வளர்ச்சி அலுவலர்கள் விவசாய வளர்ச்சி அலுவலர்கள் கோயம்புத்துாரி லுள்ள விவசாயக் கல்லூரியில் மறுபயிற்சி அளிக்கப்படு திருர்கள். கால்நடை வளர்ப்பு வளர்ச்சி அலுவலர்கள் சென்னேயிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஆட்டுத்தோலே உரிப்பதையும் பதப்ப்டுத்துவதையும் பற்றிய விஞ்ஞான முறையில் பயிற்சி பெறுகிறர்கள். அந்தப் பயிற்சியை நான்கு வார கால அளவுக்குப் பெறுகிருர்கள். விவசாய வளர்ச்சி அலுவலர்கள் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு, காயங்குளத்திலும், காசரகோடிலும் தென்னே வளர்ப்பு பற்றிய திருந்திய முறைகளேப்பற்றி பயிற்சி அளிக்கப்படு கின்றனர். உதகமண்டலத்திலும், பெல்லாரியிலும் மண்வளப் பாதுகாப்பைப் பற்றியும் பயிற்சி அளிக்கப்படுகின்றனர். (4) கிராம சேவகர்கள் கூட்டுறவுச் சங்க ஜில்லா ரிஜிஸ்டிரார் மேற்பார்வையின் கீழ், கூட்டுறவு வளர்ச்சி அலுவலர்கள், கிராம சேவகர் களுக்கு கூட்டுறவில் பயிற்சியும் மாவட்ட விவசாய அலுவலர்கள், கிராம சேவகர்களுக்கு விவசாயத்தில் பயிற்சி பெறுவதற்கு வகை செய்யப்பட்டிருக்கிறது. சேவையிலிருந்து கொண்டு பெறும் இப்பயிற்சியை ஒவ்வொரு அரை ஆண்டுக் காலத்தில் உதவி அபிவிருத்திக் கமிஷனர் (பயிற்சி) பரி சீலனே செய்வார். காட்பாடியிலுள்ள விவசாய நிறுவனத்தில் கோழிப் பண்ணே வளர்ப்பு குறித்தும், மார்த்தாண்டத்தி லுள்ள இளைஞர் கிறிஸ்துவ சங்க (Y.M.C.A) கிராம செய் முறை நிலையத்தில் கோழிப் பண்ணே வளர்ப்பு, தேனி வளர்ப்புக் கலேயிலும் கிராம சேவகர்களுக்கு விசேஷப் பயிற்சி கொடுக்கப்படுகிறது. தே. கல்லுப்பட்டியில் உள்ள கிராமக் கைத்தொழில் வழிகாட்டி நிலையத்தில் கிராமக் கைத் தொழில்களில் கிராம சேவகர்களுக்கு மூன்று மாத கால அளவுக்கு பிரத்தியேகப் பயிற்சி அளிக்கப்படும். பவானிசாகரி லுள்ள கிராம வளர்ச்சிப் பயிற்சி நிலையத்தில் கிராம சேவகர் களுக்காக இரண்டு மாத கால அளவு மறு பயிற்சியும் கொடுக்கப்படுகிறது. தொகுதிக்கு 30 கிராம சேவகர்களாக பயிற்சிக்கு இந்த நிலையத்திற்கு அனுப்பப்படுகின்றனர்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/833
Appearance