பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/838

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 1955-ம் ஆண்டு சென்னேப் பஞ்சாயத்துச் சட்டத்தின், 11 (1) பிரிவின்கீழ் பஞ்சாயத்து யூனியன் மன்றத்தை அமைக்கிற அறிவிப்பில் குறிப்பிட்ட தேதி முதல் சம்பந்தப் பட்டபஞ்சாயத்து அபிவிருத்தி வட்டாரத்தில் 1950-ம் ஆண்டு கிராமப் பஞ்சாயத்துச் சட்டம் ஆகியவை ரத்தாகிவிடும். அதன்பின் அந்தப் பஞ்சாயத்து அபிவிருத்தி வட்டாரம் எந்த மாவட்டக் கழகத்தின் அதிகார வரம்புக்குள்ளும் இருக்காது. எனவே, 1960 அக்டோபர் 2-ம் தேதி முதல் பஞ்சாயத்து யூனியன் மன்றங்கள் அமைக்கப்பட்டிருக்கிற பஞ்சாயத்து அபிவிருத்தி வட்டாரங்கள் விஷயமாக, மேற்கண்ட அரசாங்க உத்தரவை அனுசரித்து, 1950-ம் ஆண்டு சென்ன்ேக் கிராமப் பஞ்சாயத்துச் சட்டத்தின் 91-வது, 92-வது பிரிவுகளின்கீழ் அவை நிறைவேற்றத்தக்க அலுவல் கள் ரத்தாகி விடும். 5. 1920-ம் ஆண்டு சென்னே மாவட்ட நகராட்சிச் சட்டத்தின் 249 (1) பிரிவின்கீழ், நகராட்சி மன்றங்கள், நகராட்சி எல்லேகளிலிருந்து மூன்று மைலுக்குள் இருக்கும் கிராமப் பகுதிகளில் அத்தகைய தொழில்கள் விஷயமாய் மேல்விசாரணை செய்யலாம். அந்தப் பிரிவு 1958-ம் ஆண்டு பஞ்சாயத்துச் சட்டத்தின் 192 (b) பிரிவில்ை திருத்தப் பட்டதால், நகராட்சி மன்றங்கள் அந்தக் கிராமப் பகுதி களில் அபாயகரமான அல்லது தீங்கு உண்டாக்கத் தக்க தொழில்கள் விஷயமாய் மேல் விசாரணை செய்யும், கட்ட னங்கள் விதித்து வாங்கும் அதிகாரமானது அந்தப் பிரதேசங்களில் பஞ்சாயத்து யூனியன் மன்றங்கள் அமைக் கப்படுகிற தேதி முதல் ரத்தாகி விடும். 6. பஞ்சாயத்து யூனியன் மன்றம் அமைக்கப்படும் தேதி முதல், மாவட்டக் கழகமும் நகராட்சி மன்றமும் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அபிவிருத்தி வட்டாரத்தின் எல்லேக்குள் இருக்கிற பஞ்சாயத்தில் அல்லது கிராமப் பகுதியில் செலுத்தத்தக்க அதிகாரத்தை இழந்துவிடும். பஞ்சாயத்துக் கிராமங்களின் விஷயத்தில் பஞ்சாயத்து யூனியன் மன்றமும் கமிஷனரும், நகரப் பஞ்சாயத்தின் விஷயத்தில் நகரப் பஞ்சாயத்தும் நிர்வாக அதிகாரியும் 1958-ம் ஆண்டு பஞ்சாயத்துச் சட்டத்தின் 111-வது பிரிவின் ஏற்பாடுகளே அனுசரித்து அந்த அதிகாரங்களேச் செலுத்துவர். 7. மனித உயிருக்கு, தேகாரோக்கியத்துக்கு அல்லது சொத்துக்கு அபாயகரமானது அல்லது தீங்கு உண்