உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கொள்வோம். அப்போது அங்கத்தினர்கள், நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டுவந்து அவரை விலக்கி விட முயற்சிக்கலாம். நம்பிக்கையில்லாப் பிரேரனைக்கு, பஞ்சாயத்து அங்கத் தினர்களில் சரிபாதிக்கு குறையாமல் ஆதரவு தரவேண்டும். அவர்கள் பிரேரணையில் கையொப்பமிட்டால்தான் தீர் மானத்தைக் கொண்டு வரலாம். இப்படி ஒரு தீர்மானம் கொண்டுவரப் போவதாக ஒரு நோட்டிலையும். பாதிப் பேருக்குமேல் கையொப்பமிட்ட் பிரேரணையும், மேற்படி அங்கத்தினர்களில் யாராவது இரண்டு பேர், தாகில்தாரிடம் நேரில் சென்று கொடுக்க வேண்டும். தாசில்தார், குற்றச் சாட்டுகள் குறிப்பிட்ட கடிதத்தின் நகலையும், நோட்டிலையும் சம்பந்தப்பட்ட தலைவர் அல்லது துணைத் தலைவருக்கு அனுப்பி, ஒரு வாரத்துக்குள் விளக்கம் எழுதியனுப்ப வேண்டும் என்று கேட்பார். பிறகு, தாசில்தார். இதற்கென 15 நாட்கள் நோட்டீஸ் கொடுத்து பஞ்சாயத்துக் கூட்டத்தை கூட்டுவார். கூட்டத்துக்குதாசில்தாரைத் தவிர வேறு யாரும் தலைமை வகிக்கக் கூடாது. கூட்டம் தொடங்கியதும் தாசில்தார் நம்பிக்கையில்லா பிரேரணையையும், குற்றச் சாட்டுகளையும் வாசிப்பார். பிறகு, தலைவர் அல்லது துணைத் தலைவர் விளக்கம் தந்திருந்தால் அதையும் வாசிப்பார். இதன் பேரில் எவ்வித விவாதமும் கூடாது. பஞ்சாயத்தின் மொத்த அங்கத்தினர்களின் எண்ணிக் கையில் மூ ன் றி ல் இரண்டு பங்குக்குக் குறையாமல் பிரேரணையை ஆதரித்தால் அது நிறைவேற்றப்பட்டதாகும். உடனே முடிவை தாசில்தார் இன்ஸ்பெக்டருக்குத் தெரிவிப் பார். அந்த நிமிஷம் முதல், தலைவர் பதவியை இழந்தவர் ஆவார். 责 责 ★ இதேபோல் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் தலைவர் அல்லது துணைத் தலைவர் மீதும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்து நிறைவேற்றலாம்,