உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 அப்போது நோட்டிஸையும் பிரேரணையையும் தாசில் தாருக்குப் பதிலாக, ரெவினியூ டிவிஷனல் அதிகாரியிடம் நேரில் கொடுக்க வேண்டும். ரெவினியூ டிவிஷனல் ஆபீஸர் கூட்டத்தை மேற்சொன்ன விதமாக நடத்தி முடிவை அரசாங்கத்தாருக்கு அறிவிக்க வேண்டும். 49. மினிட்ஸ் புத்தகம் என்ருல் என்ன? கூட்டம் நடைபெறும்போது அதன் நடவடிக்கைகளே உடனுக்குடன் பதிவு செய்வதற்காக ஒரு புத்தகம் உண்டு. இதற்கு மினிட்ஸ் புக் என்று பெயர். நடவடிக்கைக் குறிப்புப் புத்தகம் என்றும் சொல்லலாம். மேற்படி புத்தகம் வருஷக் கணக்காகப் பாதுகாத்து வைத்துக் கொள்ளக்கூடிய விதத்தில் நல்ல காகிதத்தில் உறுதி யான பைண்டுடன் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். 50. மினிட்ஸ் எழுதுவது எப்படி? ஆங்கிலத்தில்தான் மினிட்ஸ் எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை ; தமிழிலும் எழுதலாம், கூட்ட நடவடிக்கைகளே எல்லாம் புத்தகத்தில் பதிய வேண்டும். இது மிகவும் முக்கியமான தஸ்தாவேஜூ ஆகும். எனவே வெகு கவனமுடன் பதிய வேண்டும். அதில் அடித்தல், திருத்தல் இருக்கக்கூடாது. பக்கங்களைக் கிழிக்கக் கூடாது. விவகாரம் ஏதேனும் வந்தால் இந்த மினிட்ஸ் புத்தகம் தான் ஆதாரம். எனவே, தலைவர் மினிட்ஸ் எழுதுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தீர்மானத்தையும் இதில் பதிய வேண்டும். அத்துடன் அவற்றைப் பிரேரேபித்தவர் பெயரும், ஆமோதித் தவர் பெயரும் இருக்க வேண்டும். ஏகமனதாக நிறைவேறி ஞல் அதையும் குறிப்பிட வேண்டும். ஒட் எடுக்கப்பட்டிருந் தால், அதன் விவரத்தையும் முடிவையும் குறிக்க வேண்டும். கூட்டம் தொடங்கியது முதல் கடைசிவரை ஒவ்வொரு நிகழ்ச்சியும் பதிவு செய்யப்பட்ட பின் அதன் கீழே கூட்டத் தல்ை வர் கையொப்பமிட வேண்டும். அங்கத்தினர்கள் எவரேனும் விரும்பினுலும் கையொப்பமிடலாம். 4.