உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/850

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

363 போன்று தங்களுக்குள் கடிதப் போக்கு வரத்து நடத்திவரு வது பொருத்தமானதல்ல. எனவே, பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் ஒரே அலுவலகமாகக் கருதப்பட வேண்டும் என்றும், வெவ்வேறு வளர்ச்சி அலுவலர்கள் பஞ்சாயத்து யூனியன் கமிஷனரின் அலுவலக அலுவலர்கள் என்றும் வலியுறுத்தப்படுகிறது. பஞ்சாயத்து யூனியன் அலுவலகத் திற்குப் புறம்பாக சுயேச்சையான அதிகாரிகளாக அவர்கள் கருதப்படக் கூடாது. பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் சம்பந்தமான எல்லாக் கடிதப் போக்கு வரத்துகளும், கமிஷனர் பெயரிலும், அவருடைய அனுமதியுடனும் மட்டுமே நடத்தப்பட வேண்டும். பஞ்சாயத்து யூனியன் கமிஷனரின் அனுமதி பெருமல், பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திலி ருந்து எந்தக் கடிதமும் வெளிவரக் கூடாது. வழக்கமான விஷயங்களில் கிராம சேவக்குகளுக்கு மானேஜர் கடிதம் எழுதலாம். 5. பஞ்சாயத்துத் தணிக்கை வேலே சம்பந்தமான கடிதப் போக்குவரத்துக்கு இந்த முறை பயன்படாது. டிவி ஷனல் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு அல்லது பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு இது விஷயமாய் எழுதும் கடிதங்களே வளர்ச்சி அலுவலர் அங்கீகரிக்கலாம். அவருடைய பெயரி லேயே அவை நேரடியாக அனுப்பப்படலாம். இலாகா இதர வளர்ச்சி அலுவலர்களுக்கும், மாவட்ட அலுவலர் களுக்கும் மத்தியில் நடக்கும் கடிதப் போக்கு வரத்துக்கள், கமிஷனர் பெயரிலும், அவரது அனுமதியுடன் மட்டுமே நடத்தப்பட வேண்டும். நுணுக்க விஷயங்கள் சம்பந்தமாகக் கூட நேரடியான கடிதப் போக்கு வரத்து நடத்தப்படக் சி.டTது, 6. அலுவலகத்திற்கு மானேஜர் பொறுப்பு வகிக்க வேண்டும். கமிஷனரின் மேல்விசாரணைக்கு உட்பட்டு, கணக்கர், குமாஸ் தாக்கள், காஷியர், டைப்பிஸ்ட், அட் டெண்டர்கள் இவர்களின் வேலையை அவர் மேற்பார்வையிட வேண்டும். மேலும் அலுவலகத்தில் வேலே சரிவர நடக்கு மாறு பார்த்துக்கொள்ள வேண்டும். புள்ளி விவரங்களேச் சேகரிப்பது, பாக்கித் தொகைப் பட்டியல்களேத் தயாரிப்பது, புள்ளி விவரங்களேத் திரட்டுவது, அலுவலக நிர்வாகம் சம்பந் தமான இதர விஷயங்களேச் சேகரிப்பது ஆகிய வேலேகளுக் காக, அவர் கமிஷனரின் பெயரில் செயலாற்றி, வளர்ச்சி அலுவலர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும். தபால்களைப் பிரித்து அனுப்புவது, டைப்