பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/852

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

365 தினங்களில் அலுவலகத்திற்கு வரவேண்டும். அவர் அந்தப் பதிவுக் கட்டுகளே அலுவலகத்திலேயே பார்த்து முடிவு செய்ய வேண்டும். உள்ளுர் பரிசீலனைக்காக அவற்றை வெளியே எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட் டால்தான் அவற்றை வெளியே எடுத்துச் செல்லலாம். உள்ளுர்ப் பொதுமக்கள் சில தகவல்கள் கேட்பதற்காகவும், சில ஆலோசனைகள் நடத்துவதற்காகவும், பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்கு வரவேண்டுமானல், ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள் அலுவலக வேலே நடைபெற வேண்டும் என்று நிர்ணயிக்க வேண்டும். பஞ்சாயத்துத் தலைவர்களுக்கும் அதல்ை நன்மை உண்டு. அந்த இரண்டு' நாட்களிலும் கமிஷனரும், எல்லா வளர்ச்சி அலுவலர்களும் அலுவலகத்திற்கு வருவர். தலைவருடன் கலந்தாலோசித்து இந்த இரண்டு நாட்களும் நிச்சயிக்கப்படலாம். சாதாரண மாக தலைவர், அலுவலகத்திற்கு வரும் தினங்களாக அவை இருக்க வேண்டும். விவசாய வளர்ச்சி அலுவலர், பஞ்சா யத்து வளர்ச்சி அலுவலர், என்ஜினியரிங் மேற்பார்வை யாளர் ஆகியோர் தாங்கள் முகாமிடும் இடங்களிலும் பதிவுக் கட்டுகளேக் கவனிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். எனவே, அவர்கள் முகாமிடும் இடங்களில் பதிவுக் கட்டு களேப் பெற அவசியமான ஏற்பாடுகளேச் செய்ய வேண்டும். 10. சில சமயங்களில் கணக்கர்கள் பில்களே தயாரிக்க வேண்டும் என்றும் ரொக்கத்தை கையாள்வது, பில்களே ரொக்கமாக்குவது முதலிய வேலேகளேயும் செய்யவேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட் டுள்ளது. இது தவருண முறையாகும். கணக்கர் எப்போதும். ரொக்க சம்பந்தமான விவகாரம் நடத்தக்கூடாது. மேலும் அவர், பில்களேத் தயாரிக்கக்கூடாது. ஏனென்ருல், பில்களே அவர் சரி பார்க்க வேண்டியிருக்கும். 11. 1961 பிப்ரவரி 22-ம் தேதி எண் 203498/T 4/60-3 குறிப்பில் சில உத்தரவுகள் ஏற்கனவே பிறப்பிக்கப் பட்டுள்ளன. தேசீய வளர்ச்சி சேவை திட்ட ஊழியரின் சேவைகளும், பஞ்சாயத்து யூனியன் ஊழியர்களுடைய சேவைகளும் ஒன்றுக்கொன்று தாராளமாகக் கிடைக்கும்படி இருக்க வேண்டும் என்றும், அன்ருட நிர்வாக விஷயங்களில் இரண்டு தொகுதி ஊழியர்களுக்கும் எந்த வித்தியாசமும் இருக்கக் கூடாது என்றும் மேற்படி குறிப்பில் கூறப்பட் டுள்ளது. அலுவலக காரியங்களும், பண விவகாரம் சம்பந்தப்பட்ட காரியங்களும் துரிதமாகவும், திறமை