368 14. கீழ்க்கண்ட அலுவலக நடைமுறை அனுசரிக் கப்பட வேண்டும் என்று நிச்சயிக்கப்படுகிறது. பெயர் குறிப் பிட்ட அலுவல் கடிதங்கள் நீங்கலாக, மற்ற தபால்களே மானேஜர் திறக்க வேண்டும். வரப்பெற்ற கடிதங்களே வரிசை எண் போட்டு விநியோக ரிஜிஸ்தரில் குறித்துக்கொள்ளப்பட வேண்டும். அந்த கடிதங்களே விநியோகிப்பது குறித்தும், அவர் குறிப்பிட வேண்டும். தபால் குமாஸ்தா பெற்றுக் கொள்ளப்படும் கடிதங்களே அந்தந்த குமாஸ்தாவுக்குக் கொடுத்து விநியோக ரிஜிஸ்தரில் அவரது ஒப்பத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்தக் குமாஸ்தா அதன் மேல் நடவடிக்கை எடுத்து, அது ஒரு சாதாரணமான தன்மை உள்ள கடிதமாயிருந்தால் மானேஜருக்கு அனுப்ப வேண்டும். அந்த கடிதத்தை வளர்ச்சி அலுவலர்தான் கவனிக்க வேண்டும் என்ற அவசியமிருந்தால் அந்தக் குமாஸ்தா, அவசியமான முன்குறிப்புகளுடன் அதைச் சம்பந்தப்பட்ட வளர்ச்சி அலுவலருக்கு அனுப்ப வேண்டும். கமிஷனர், பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர், விவசாய வளர்ச்சி அலுவலர் மேற்பார்வையாளர் இவர்களுக்கு சம்பந்தப்படும் காகிதங்கள் அல்லாத மற்றவைகளே அலு வலகத்துக்கு வெளியே அனுப்பப்படக் கூடாது. இந்த விஷயங்களில் சேவகர்கள் அந்த காகிதங்களே அலுவலகத் திலிருந்து சேகரித்து முகாமுக்கு எடுத்துச் செல்லவேண்டும். வளர்ச்சி அலுவலர் அதன் மேல் நடவடிக்கை எடுத்த பிறகு அதை நேரடியாக கமிஷனருக்கு அனுப்பும்போது அவசிய மான நகல்களேத் தாமே தயாரிக்க வேண்டும். கமிஷனர் அதை அங்கீகரித்த பிறகு, அது மானேஜருக்குத் திருப்பி அனுப்பப்படவேண்டும். மானேஜர் தெளிவான முதல் நகலே அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டு மற்றவைகளே சம்பந்தப்பட்ட குமாஸ்தாவுக்குத் திருப்ப வேண்டும். அலுவலக தஸ்தா வேஜிகளே அனுப்புவதற்கும், முகாமிட்டுள்ள வளர்ச்சி அலு வலர்களிடமிருந்து அவற்றைப் பெறுவதற்கும், ஒரு மாற்று ரிஜிஸ்தர் வைத்து வரப்படலாம். இந்த மாறுதல்களுடன் டாட்டன் ஹாம் முறையை (Totten ham System) sølgpicffi#G5 6Drib. egy g @ÉGurgi மாவட்ட ரெவின்யூ அலுவலகங்களில் அனுசரிக்கப்படுகிறது. ஆகவே, இது விஷயமாகவுள்ள மற்ற விதிகள் ரத்தாகி விடுகின்றன. [Memo No. 164207/T/59-6, 6–4–1961)
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/855
Appearance