பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/859

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

373 விஷயம் அல்லது தீர்மானத்தை அவர் நிராகரிக்க வேண்டும், அவரது முடிவு இறுதியானதாகும். தலைவர் அனுமதிக்கும் ஒரு விஷயம் அல்லது தீர்மானம் அந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட வேண்டும். நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு விஷயம் அல்லது தீர்மானம் குறித் துத் தமது கருத்துக்களே எழுதி வைக்கத் தலேவருக்கு உரிமை உண்டு. அவருடைய கருத்துக்கள் கொண்ட குறிப்பு, அத் தகைய விஷயம் அல்லது தீர்மானம் குறித்து மேற்படி மன்றம் ஆலோசனை செய்யுமுன் அங்கத்தினர்களுக்குச் சுற்ற றிக்கையாக அனுப்பப்பட வேண்டும். அல்லது மேற்படி தீர்மானம் அல்லது விஷயம்பற்றி மேற்படி மன்றம் ஆலோ சிக்கையில் மேற்சொன்ன குறிப்பு, மன்றத்தின் முன்னர் வைக்கப்பட வேண்டும். ஆளுல், தலைவர், சாதாரணக் கூட்டம் ஒன்றில் அந் தக் கூட்டத்திற்கு வந்துள்ளவர்களும் வாக்கு அளிக்க உரிமை யுள்ளவர்களுமான பெரும்பான்மையான அங்கத்தினர்களின் சம்மதத்துடன் துணை நிகழ்ச்சி நிரல் ஒன்றைத் தயாரித்து, அதனே மன்றத்தின்முன் வைக்கலாம். - 3. மன்றத்தின் கூட்டங்கள் எல்லாவற்றிற்கும் பொது மக்கள் வரலாம். ஆளுல், தலைவர் அல்லது தலேமை வகிக்கும்படி நியமனம் செய்யப்பெற்ற ஒர் அங்கத்தினர் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மேற்படி மன்றம் கேட்டுக் கொள்வதன்மேல் பொதுமக்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட நபர் கூட்டத்திலிருந்து வெளியேற வேண்டும் என கட்டளே இடலாம். ஆனால், அதற்கான காரணங்களே 6-வது விதி யின்கீழ் வைக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைக் குறிப்புப் புத்த கத்தில் எழுதி வைக்க வேண்டும். 4. மேற்படி மன்றத்தின் மூன்றில் ஒரு பங்கு அங்கத் தினர்கள் வந்திருந்தாலன்றி, ஒரு கூட்டத்தில், எந்த விவ காரமும் நடத்தப்படக்கூடாது. 5. கூட்டம் நடத்த வேண்டிய நேரத்திலிருந்து அரை மணி நேரத்திற்குள் கூட்டம் நடத்துவதற்கு அவசியமான எண்ணிக்கையுள்ள அங்கத்தினர்கள் வராவிட்டால், கூட் டம் ஒத்திவைக்கப்பட வேண்டும். .ே மேற்படி மன்றக் கூட்டம் ஒவ்வொன்றின் நட வடிக்கை குறிப்புகளே இது காரியத்திற்காக வைத்துவரப் படும் புத்தகம் ஒன்றில் எழுதப்பட வேண்டும். இதில் தலேவர் கையொப்பமிட வேண்டும். தலைவர் வராவிட்டால்