உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 51. டிசன்டிங் மினிட் என்ருல் என்ன ? கூட்டத்தின் நடவடிக்கைகள் அங்கத்தினர்களில் பாருக் காவது சம்மதமில்லையாளுல் அவர் அதைத் தெரிவிக்கலாம். கூட்டத்தின் ஏதாவது ஒரு பகுதி மட்டும் சம்மதம் இல்லே யாளுல் அதையும் தெரிவிக்கலாம். இவ்விஷயம் குறித்து அவர் தகுந்த காரணங்களுடன் விளக்க வேண்டும். கூட்டம் முடிந்த 48 மணி நேரத்துக்குள் அந்த அங்கத் தினர் தமது அபிப்பிராய் பேதத்தையும், அதற்கான காரணங் களையும் தெளிவாக எழுதித் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். கூட்ட நடவடிக்கைக் குறிப்பும் அதைப்பற்றி அங்கத்தின ருடைய கடிதத்தின் நகலையும் தலைவர் இன்ஸ்பெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கத்தினர் இவ்வாறு தமது அபிப்பிராய பேதத்தை தெரிவிப்பதற்கு டிசன்டிங் மினிட் என்றும் பெயர். 52. அஜண்டா என்ருல் என்ன : பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் சூட்டத்தில் ஆலோசனத்கு எடுத்துக் கொள்ளப் போகிற விஷயங்களின் வரிசைக் கிரமம்ான பட்டியலுக்கு அஜண்ட்ா என்று பெயர்.

  • நிகழ்ச்சி நிரல் ? என்றும் இதைச் சொல்லலாம். விவாதிக்க வேண்டிய எல்லா விஷயங்கள் குறித்தும் அதில் குறிப்பிட வேண்டும். அஜண்டாவில் இல்லாத் விஷயத்தை கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது. 53. அஜண்டா தயாரிப்பது எப்படி? முதலில் கேள்விகளை யெல்லாம், கேட்டவர் பெயருடன் அஜண்டாவில் பதிய வேண்டும்,

அரசாங்கத்தாரிடமிருந்து ஏதாவது தகவல் வந்திருந்து அது பற்றிக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டியிருந்தால் அந்த விஷயத்தையும் குறிப்பிட வேண்டும்.