பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/867

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38; (wi) ஒவ்வொரு மாதமும் மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் நடவடிக்கைக் குறிப்புகள், கிராம அபிவிருத்தி ஸ்தல நிர்வாகத் துறைக்கு அனுப்பப்பட வேண்டும். மேலும், மாவட்டக் கலெக்டர் நடவடிக்கை குறிப்புகளில் கண்டுள்ள் தகவல்கள் பற்றி தமது கருத்துக்களேத் தெரிவித்தும், அது குறித்து மேற்கொண்டும் தகவல்கள் கொடுத்தும் தலைமைக் காரியதரிசிக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்ப வேண்டும். 7. மாவட்ட அபிவிருத்தி மன்றத்திற்கு இந்தப் பயிற்சித் திட்டத்தை நிறைவேற்றுவதிலுள்ள பொறுப்பை வலியுறுத்து வதுடன் மாவட்ட அபிவிருத்தி மன்ற அங்கத்தினர்களுக்கு இதிலுள்ள பங்கு மிகவும் முக்கியமானது என்று சொல்ல வேண்டும். மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் ஒரு கூட்டத்திற்கும் இன்ைெரு கூட்டத்திற்கும் இடையே உள்ள் கால அளவில் வட்டார ஆலோசனேக் குழுவின் கூட்டத்தைக் கூட்டி மேற்படி உத்தரவுகளேப் பஞ்சாயத்துத் தலைவர் களுக்கு அவர்கள் விளக்க வேண்டும். வட்டார நிலேயில் கல்வி முகாம்கள் நடத்தப்படுகையில், மாவட்ட அபிவிருத்தி மன்ற அங்கத்தினர் இந்த முகாம்கள் வெற்றிகரமாக செயல் படுவதற்கு உதவ வேண்டும். பஞ்சாயத்து யூனியன் தலேவர் அல்லது மாவட்ட அபிவிருத்தி மன்றத்திலுள்ள இதர வட்டாரப் பிரதிநிதிகள், வட்டார ஆலோசனேக் குழுவிற்கும் அபிவிருத்தி மன்றத்திற்கும் இடையே பாலமாக அமைந்து செயலாற்ற வேண்டும். 7. பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனியன்கள், மாவட்ட அபிவிருத்தி மன்றங்கள் ஆகியவற்றின் கூட்டங்கள் சம்பந்தப்பட்ட உத்தரவு விளக்கங்கள் அபிவிருத்தி பற்றிய பல்வேறு விஷயங்களேக் குறித்து அரசாங்கத்தாருக்கு ஆலோசனே கூறுவதற்காக, மாவட்ட அளவில் ஒர் ஆலோசனைச் சபையை அமைக்க மாவட்ட அபிவிருத்தி மன்றச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது அமுல் நடத்தப்பட்டு வரும் பஞ்சாயத்து சட்டத் தின்கீழ், கிராம வட்டார நிலேகளில் பஞ்சாயத்துகளும், பஞ்சாயத்து யூனியன்களும் அமைக்கப்பட்டுள்ளன. சட்டத் தின் அடிப்படையில் அவைகளுக்கு வகுத்துக் கொடுத்துள்ள அலுவல்களே அவைகள் நிறைவேற்றிவருகின்றன.