382 2. மேலும், ஒவ்வொரு வட்டாரத்தின் பஞ்சாயத்து யூனியனும், பஞ்சாயத்துகளும் கூட்டாகச் சேர்ந்து, வட்டார அபிவிருத்திக்காக ஒர் ஐந்தாண்டுத் திட்டத்தைத் தீட்டி நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் அவை நாட்டின் அபிவிருத்திக்கான மூன்ரும் ஐந்தாண்டுத் திட்டத்திலும் திறமையான முறையில் பங்கெடுத்துக் கொள்ளலாம். அபி விருத்தி மாவட்டங்களில் மூன்ரும் ஐந்தாண்டுத் திட்டத் தைப் பற்றிய தகவல்களே மக்களுக்குத் தெரிவிப்பதுடன் அதன் முன்னேற்றத்தை ஆராய்ந்து ஒருமுகப் படுத்தும் பணியை மாவட்ட அபிவிருத்தி மன்றங்கள் புரிய வேண்டும். 3. மாவட்ட அபிவிருத்தி மன்றங்கள், பஞ்சாயத்து யூனியன்கள், பஞ்சாயத்துகள் முதலியவற்றை முறையே மாவட்ட, வட்டார, கிராம நிலேயில் தங்களுடைய பணிகளேத் திறமையாக நிறைவேற்றச் செய்யும்பொருட்டு, சில உத்தரவு விளக்கங்கள் இயற்றும் பிரச்னேயைப்பற்றி அரசாங்கத்தார் ஆராய்ந்தனர். இவை மாநிலம் முழுவதிலும் ஒரே தன்மை உள்ளதாக இருக்குமாறும் அவர்கள் ஆராய்ந்தனர். 1961 மே மாதம், உதகையில் நடந்த கலெக்டர்கள் மகாநாட்டில் இதற்காகப் பிரேரேரணைகள் பிரேரேபிக்கப்பட்டன. அவற் றின்மீது நடந்த விவாதங்களின் அடிப்படையில் கீழ்க்கண்ட உத்தரவு விளக்கங்களே இயற்றுகின்றனர். 4. சாதாரண பொதுக் கூட்டங்கள்-மாவட்ட அபி விருத்தி மன்றங்கள் :-மாவட்ட அபிவிருத்தி மன்றச் சட்டத் தின்படி, மாவட்ட அபிவிருத்தி மன்றங்கள் அவசியத்திற் கேற்ப, அடிக்கடி கூட வேண்டும். அவற்றின் கூட்டங் களுக்கு இடையில் மூன்று மாதங்களுக்கு அதிகமான இடை வெளி இருத்தல் கூடாது. மேலும் இந்தச் சட்டத்தின்படி மாவட்ட அபிவிருத்தி பற்றிய விஷயங்களேக் குறித்து மாநில அரசாங்கத்தினருக்கு ஆலோசனே கூறும் பொறுப்பும் மன்றங்களேச் சாருகின்றது. எனவே, பல்வேறு அபி விருத்தித் திட்டங்களேச் சீரமைத்தல், நிறைவேற்றுதல் பற்றிய கெடுவுக்கால ஆய்வுரைகளும் (Periodical Reports) ஆலோசனைகளும் அரசாங்கத்தாருக்குத் தேவைப்படு கின்றன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, ஒவ் வொரு மாவட்டத்திலும், மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் சாதாரணப் பொதுக் கூட்டம், ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி, ஏப்ரல், ஜூன், ஆகஸ்ட், அக்டோபர், டிசம்பர், ஆகிய ஒன்று விட்ட மாதங்களில் நடக்கவேண்டும் என அரசாங்கத் தார் கட்டளே யிடுகின்றனர். இரண்டு மாவட்ட அபிவிருத்தி
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/868
Appearance