$3. ஏதாவது ஒரு இனத்துக்கு பணம் அனுமதிக்க வேண்டி விருந்தால் அதை பிரிஸ்தாபிக்க வேண்டும், தீர்மானங்களே, அவற்றைக் கொண்டு வரப்போகும் அங்கத்தினர் பெயருடன் குறிக்க வேண்டும். கூட்டத்தில் கவனிக்க வேண்டிய அலுவல்கள் எல்லா வற்றையுமே வரிசைக் கிரமமாக குறித்து அஜண்டா தயார் செய்ய வேண்டும். 54. பஞ்சாயத்துக்குப் பணம் எப்படிக் கிடைக் கிறது ? ஒவ்வொரு பஞ்சாயத்தும், வீட்டுவரி, தொழில்வூரி, வண்டிவரி போன்றவற்றை விதித்து வசூலிக்கலாம். இது தவிர சொத்து மாற்றங்களின் மீதும் ஒரு தீர்வை விதித்து வசூல் செய்யலாம். பஞ்சாயத்து யூனியன் வசூலிக்கும் பிரதேச வரியில் பஞ் சாயத்துக்கு ஒரு பங்கு கிடைக்கும். பஞ்சாயத்து வசூலிக்கும் வீட்டு வரிக்கு இணையான மான் யத்தை அரசாங்கம் தரும். பொது சுகாதார சட்டத்தின் கீழ் கிராமத்தில் சுங்கவரி விதிக்கலாம். பஞ்சாயத்து மார்க்கட்டுகளில் வசூலிக்கும் கட்டணம். பஞ்சாயத்து நிர்வாகத்திலுள்ள் எண்டோமெண்ட் டிரஸ்டுகளிலிருந்து கிடைக்கும் வருமானம். கிராமப் புறம்போக்குகளிலிருந்து கிடைக்கும் வருமானம். மீன்பிடி, தோணித்துறை கட்டணங்கள், பாத்தியதை கொண்டாடாத டெபாஸிட்டுகள் பறிமுதல், அபராதத் தொகை, மரங்களிலிருந்து கிடைக்கும் வருமானம். இவை போன்ற இனங்களில் கிடைக்கும் பணத்தைக் கொண்டே பஞ்சாயத்து தனது செலவுகளைச் செய்ய வேண்டும். 55. பஞ்சாயத்து விதிக்க வேண்டிய வரி штєвоєн 2
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/87
Appearance