உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/870

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 கூட்டத்தில் எடுத்துரைக்க முடியும். இதைக் கருத்தில் கொண்டு, பஞ்சாயத்துக் கூட்டம் பஞ்சாயத்துத் தலைவரால் நிச்சயிக்கப்படும் தேதியன்று கூடவேண்டும் எனவும், அந்தத் தேதி சாதாரணமாக ஒவ்வொரு மாதத்தின் 1-ம் தேதிக்கும் 10-ம் தேதிக்கும் இடையில் உள்ளதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்தார் கருதுகின்றனர். பஞ்சாயத்து அலுவல்களேப் பஞ்சாயத்துக் கூட்டங்களில் தான் நடத்த வேண்டுமே ஒழிய, சுற்றறிக்கைகள் முதலிய வற்றை அனுப்பி வைப்பது மூலம் நடத்தக்கூடாது எனவும், பஞ்சாயத்துகளின் கூட்டங்கள், விதிகளினின்றும் சிறிதும் பிறழாமல் நடத்தப்பட வேண்டும் எனவும் அரசாங்கத்தினர் வற்புறுத்திக் கூறுகின்றனர். எந்த இடத்தில், எந்த தேதி யன்று பஞ்சாயத்து கூடுகின்றது என்பதைக் கிராம மக்க ளுக்கு அறிவிக்க வேண்டும். பஞ்சாயத்துக் கூட்டங்களுக்கு கிராம மக்கள் அனுமதிக்கப்பட வேண்டும். பஞ்சாயத்து, தங்களுடைய பணிகளேத்தான் கவனிக்கின்றது என்பதைக் கிராம மக்கள் உணரும்படி செய்வதுடன் பஞ்சாயத்தின் பணிகளிலும் அவர்கள் தீவிரமாக சிரத்தை எடுக்கும்படிச் செய்ய வேண்டும். பஞ்சாயத்துகள்தாம் கிராமங்களின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் வகை கோலும் சபைகளாக இருப்பதனால், அவற்றின் கூட்டங்கள் ஒழுங்காக நடத்த வேண்டும். அப்பொழுதுதான் பஞ்சாயத்துகள் ந ல் ல வளர்ச்சியடைய முடியும். 7. அலுவல்களே வகைப்படுத்துதல்: பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனியன்கள், மாவட்ட அபிவிருத்தி மன்றங்கள் ஆகியவை அலுவல்கள் நடத்துவது சம்பந்தமாக ஏற்கெனவே வகுக்கப்பெற்ற விதிகளுக்கு உட்பட்டு, அரசாங்கத்தினர் கீழ்க்கண்டவற்றை மேற்கூறிய பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன்கள், மாவட்ட அபி விருத்தி மன்றங்கள் ஆகியவற்றின் சாதாரண அலுவல்கள் எனக் கட்டளையிடுகிறர்கள்: (1) அரசாங்கத்தினரால் நிச்சயிக்கப்பட்ட அலுவல்கள்; (2) பிரதேச அலுவல்கள்; பிரதேச அலுவல்கள் என்பதில், அரசாங்கத்தார் நிச்ச யித்தது அல்லாத மற்ற அலுவல்கள் எல்லாம் அடங்கும். அரசாங்கத்தினரால் நிச்சயிக்கப்பட்ட அலுவல்கள் என்பது கீழே குறிப்பிட்டுள்ள அரை ஆண்டு ஆய்வுரைகள். மற்றும்