உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/876

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 (ii) குறிப்பிட்ட நிலேக் குழுவின், பெரும்பகுதி வேலேக் குப் பொறுப்பேற்றுள்ள அபிவிருத்தித் துறை தலைமை மாவட்ட அதிகாரி நிலைக் குழுவைக் கூட்டலாம். ஒவ் வொரு முறையிலும் சாதக பாதகங்கள் உள்ளன. எனவே, அரசாங்கத்தார் தற்போது இந்த விஷயத்தைக் கலெக்ட ருடைய முடிவுக்கு விட்டுவிட்டனர். எல்லா மாவட்டங் களிலும் இதற்கான ஏற்பாடுகள் ஓராண்டில் எடுத்துக் கொள்ளப்படும்; மாநிலம் முழுவதற்கும் ஒரு சீரான நடைமுறை அனுபவத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு வரப்படும். 12. சட்டத்தில் சொல்லப்படாமல் தனிப்பட்ட முறை யில் அமைந்த குழுக்களைத் தொடர்ந்து வைத்துவர வேண் டியதன் அவசியம் :-பொதுவாக மேற்சொல்லிய சட்ட பூர்வ மான ஐந்து நிலேக் குழுக்களிடத்தில் மாவட்டத்தின் சகல வகை வேலைகளும் இணக்கப் பெற்றிருக்கும். எனினும், மாவட்ட அளவில், மாவட்ட அபிவிருத்தி மன்றத்துடன் சம் பந்தப்படாமலேயே அலுவல் புரியும் நிலைக் குழுக்களும் இருக்கின்றன. இந்தச் சட்டத்தின் நோக்கம் என்னவெனில் சகல அபிவிருத்தி வேலேகள் சம்பந்தமாக மாவட்ட அள வில், பல்வேறு தனிக் குழுக்கள் இதுவரை செய்து வந்த பரிசீலனை, ஒருமுகச் சீரமைப்புப் பணி உள்ளிட்ட நிர்வாக அலுவல்கள் அனேத்தையும் இனி வருங்காலத்தில் மாவட்ட மன்றமோ அதன் குழுக்களில் ஒன்ருே நிறைவேற்ற வேண்டும் என்பதேயாகும். பொதுவாக இந்த நோக்கத் தைக் கருத்தில் கொண்டு மாவட்டக் கலெக்டர்கள் மாவட் டங்களிலுள்ள பல்வேறு தனிக் குழுக்களுக்கு வகுத்துள்ள பணிகளேயும் அவற்றின் அமைப்பையும் விரிவாக பரிசீலனே செய்து, அவை முழுவதும் எடுக்கப்பட்டு அதன் அலுவல் களே மாவட்ட அபிவிருத்தி மன்றத்திடமோ அதன் நிலைக் குழுவிடமோ மாற்றலாமா என்பதை ஆய்ந்து, அத்தகைய ஒவ்வொரு தனிப்பட்ட நிலேக்குழு பற்றியும் அறிக்கை தயாரித்து அனுப்ப வேண்டும். விசேஷ சந்தர்ப்பங்களில் கலெக்டர் இவ்வாறு செய்வது கூடாது என கருதினால் அத்தகைய தனிப்பட்ட குழுக்களே ஏன் தொடர்ந்து வைத்து வர வேண்டும் என்பதற்கான காரணங்களே விவரித்து விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரித்து அனுப்பி இது விஷயமாக அரசாங்கத்தின் உத்தரவைப் பெறவேண்டும். ஹரிஜன நலத்தை முன்னிட்டு, சிறிது காலம் தனிக் குழு வாகத் தொடர்ந்து இருந்து வருதல் வேண்டும் என்று