பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/877

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

391 அரசாங்கத்தார் கருதும் குழுக்களில் ஹரிஜன நலக் குழு ஒன்ருகும். 13. மாவட்ட அபிவிருத்தி மன்றமும் அதன் நிலேக் குழுக்களும், செயல்படுவதற்கு வேண்டிய செயல் முறை உதவிகள் அத்தனேயும் கலெக்டர்கள் அலுவலகங்களில் செய்து கொடுக்கப்படும். இந்தக் காரியத்துக்கு வேண்டிய சிப்பந்திகள் கலெக்டர் அலுவலகத்தில், பஞ்சாயத்து அபி விருத்திக்கு என்று ஒதுக்கிய பிரிவுகளில் பணிபுரியலாம். கலெக்டர் அலுவலகத்தில், பஞ்சாயத்து அபிவிருத்திப் பணி புரிவதற்கு ஏற்ப அலுவலகச் சீரமைப்புப் பிரச்னை அரசாங்கத்தார் கவனத்தில் இருந்து வருகிறது. அதற்குத் தேவையான உத்தரவுகள் தனியே பிறப்பிக்கப்படும். | G. O. No. 1694 R. D. and L. A. 16–6–1961 ; 8. வேலைத்திட்டமும் நிறைவேற்றும் (լք ճոքակւն 1. 1958-ம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி மன்றச் சட்டம், சென்னை 1958-ம் ஆண்டு பஞ்சாயத்துச் சட்டம் ஆகியவற்றின் நிறைவேற்புத் திட்டம் குறித்து அரசாங்கத் தார் தீர்மானித்து விட்டனர். 2. 1958-ம் ஆண்டு பஞ்சாயத்துச் சட்ட நிறைவேற் புக்கு முந்தி எடுக்க வேண்டிய முன்ைேடித் திட்டப் பணி களில் முதன்மையானதாக, 1958-ம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி மன்றச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவர வேண்டும். எனவே, அரசாங்கத்தார் 1958-ம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி மன்றச் சட்டத்தை 1959-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ம் தேதி முதற்கொண்டு அமுலுக்குக் கொண்டுவருவது என முடிவு செய்தனர். 3. கிராம அபிவிருத்தி நடவடிக்கை விஸ்தரிப்பு சேவை, கிராம அபிவிருத்தி காரியமாக ரெவின்யூ மாவட்டத்தை விட அளவில் சிறிய பகுதிகளே உடனடியாக அபிவிருத்தி செய்ய வேண்டிய கட்டத்தை அடைந்துவிட்டது. இந்த அபிவிருத்தியில் பங்கு பெற, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முனிசிபல் நகரம், தேசீய வளர்ச்சிப் பணித் திட்டம் கொண்டுவரப்படாத வட்டாரங்கள் உட்பட ஒவ்வொரு வட்டாரம் ஆகியவற்றுக்கு இந்தச் சட்டம் வகை செய்கிறது.