பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/882

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஞ்சாயத்து வழக்குகள் வழக்கு: 1 சென்னை உயர்நீதி மன்றம், கனம் நீதிபதி ரீநிவாசன் அவர்கள் மனுதாரர்: S. சிவசாமி. எதிர்மனுதாரர் : தஞ்சை மாவட்ட கலெக்டர். விஷயம் பஞ்சாயத்துச் சட்டம் 150-வது பிரிவின்கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் பஞ்சாயத்து தலேவரை பதவி நீக்கம் செய்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டால், தலைவர் வேருேர் கூட்டம் கூட்டி, மேற்படி தீர்மானத்தை ரத்து செய்யமுடியுமா? வழக்கின் சுருக்கம் S. சிவசாமி (மனுதாரர்) கூத்தனூர் பஞ்சாயத்து தலைவர். பஞ்சாயத்துச் சட்டம் 150 (1) பிரிவின்கீழ் தஞ்சை கலெக்டர் அவர்மீது சில குற்றங்களே சுமத்தி, சமாதானம் கேட்டார். அவருடைய சமாதானம் கிடைத்த பின் 150-ம் பிரிவின் மற்ற உட்பிரிவின்கீழ் மேல் நடவடிக்கைகள் எடுக் கப்பட்டன. தாசில்தார் ஒரு கூட்டத்தை கூட்டினர். அதற்கு, 15 அங்கத்தினர்களில் ஏழு பேர்கள் வந்தனர். தலைவர் வரவில்லே. அதில், தலேவரை பதவி நீக்கம் செய்யக் கோரும் கலெக்டரின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கலெக்டர், பஞ்சாயத்து தலேவரை பதவியிலிருந்து நீக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதன் பின்னர், பஞ்சாயத்து தலைவர் ஒரு கூட்டம் கூட்டினர். அதற்கு 8 அங்கத்தினர்கள் வந்தனர். அந்தக் கூட்டத்தில், பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்த முந்தைய தீர்மா னத்தை நிராகரிக்கும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப் பட்டது. மனுதாரர், இரண்டாவது தீர்மானத்தின் அடிப் படையில் முதல் தீர்மானத்தை யொட்டி வெளியான அறிவிப்பை ரத்து செய்யக் கோரினர். தீர்ப்பின் சாரம் தாசில்தார், கலெக்டர் இவர்கள் சார்பில் வாதாடப் பட்டதாவது: 150-வது பிரிவின்கீழ் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை, 150-(12) பிரிவின்கீழ் இன்ஸ்பெக்டர் (கலெக்டர்) அறிவிப்பு வெளியிட்டு அமுல் நடத்த வேண்டும்;