பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/883

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 இரண்டாவது கூட்டம் கூட்டுவதற்கு மனுதாரருக்கு அதிகாரம் இல்லே. மனுதாரர் சார்பில், பஞ்சாயத்து விதிகள் 18. (4), (9) பிரிவின்கீழ் முந்தைய தீர்மானங்களே ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக கூட்டத்தை கூட்டும் அதிகாரம் தலைவருக்கு உண்டு என்று வாதிக்கப்பட்டது. பஞ்சாயத்தின் எந்த ஒரு தீர்மானமும், அது நிறை வேற்றப்பட்ட மூன்று மாதங்களுக்குள் திருத்தப்படவோ, நீக்கப்படவோ கூடாது. ஆல்ை, அதற்கென ஒரு விசேஷக் கூட்டத்தை நடத்தி, அங்கீகரிக்கப்பட்ட அங்கத்தினர்களில் ஒரு பாதிக்கு குறையாத அங்கத்தினர்களின் ஆதரவுடன் பஞ்சாயத்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, முன்னர் செய்த தீர்மானத்தில் திருத்தமோ, நீக்கமோ செய்யலாம்.?? இவ்வாறு பஞ்சாயத்து விதிகள் 18. (9) கூறுகிறது. 150-வது பிரிவின்கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகள், பஞ்சாயத்தின் சாதாரண அலுவல்கள் சம்பந்தப்பட்ட கூட்டத்தின் தீர்மானத்திலிருந்து மாறுபட்டவை. பஞ்சா பத்து அலுவல்களுக்கான தலைவர், துணைத் தலேவர், அல்லது ஒரு அங்கத்தினர் தலைமையில் நடத்தப்படும். இவ்வழக்கில், கலெக்டர் சார்பில் தாசில்தாரைக் கொண்டு கூட்டம் கூட்டப் பட்டுள்ளது. சட்டப்படி அத்தகைய கூட்டத்துக்கு தாசில் தார்தான் தலைமை வகிக்க வேண்டும். வேறு யாரும் தலைமை வகிக்க முடியாது. 150 (11)-ன்கீழ் வரும் தீர்மானம் பஞ்சாயத்தின் சாதாரண அலுவல் சம்பந்தப்பட்டது அல்ல. பிறகு, கூட்டம் கூட்டி, அதை ரத்து செய்ய முடியாது. பஞ்சாயத்து விதிகள் இதற்குப் பொருந்தாது. மனு தள்ளுபடி செய்யப்பட்டது. [W. P. No. 1235/61, L. W., 77, 186] இதன் மீது எழுந்த ரிட் அப்பீல் (கனம் பிரதம நீதிபதி ராமச்சந்திர அய்யர் அவர்கள், கனம் நீதிபதி ராமகிருஷ்ணன் அவர்கள்.) மேற்கண்டரிட் மனு மீது எழுந்த ரிட் அப்பீலில், மேற் ஆன்பையே ஊர்ஜிதம் செய்து மனு தள்ளுபடி [W. A. No. 356/63, L. W. 78.2381.