உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/884

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 வழக்கு: 2 சென்னை உயர்நீதி மன்றம் கனம் பிரதம நீதிபதி ராமச்சந்திர அய்யர் அவர்கள் கனம் நீதிபதி வெங்கடாத்திரி அவர்கள். அப்பீல்தாரர் : டி. நாராயண ரெட்டியார் எதிர்மனுதாரர்: ஸ்தல ஸ்தாபனங்களின் இன்ஸ்பெக்டர் விஷயம் பஞ்சாயத்துச் சட்டம், பிரிவு 8. (1) இரண்டு அல்லது மூன்று கிராமங்களே ஒன்ருக இணக்க இன்ஸ்பெக்டருக்கு அதிகாரம் உண்டா? வழக்கின் சுருக்கம் செங்கற்பட்டு ஜில்லாவில் பெரம்பூர் கண்டிகை, கடமலே புத்துார் என்னும் இரண்டு ரெவின்யூ கிராமங்கள் இருக் கின்றன. அவை ஒவ்வவான்றும் 500க்கு மேற்பட்ட ஜனத் தொகை கொண்டவை. அவை ஒன்றுக்கொன்று அருகா மையில் உள்ளவை. 1960, மார்ச் மாதம், பஞ்சாயத்துச் சட்டம் 8. (1) பிரிவின்கீழ் எதிர் மனுதாரர் (ஸ்தல ஸ்தாப னங்களின் இன்ஸ்பெக்டர்) கடமலேபுத்துாரை ஐந்து அங்கத் தினர்கள் கொண்ட பஞ்சாயத்தாக அமைக்க முதலில் அறிவிப்பு வெளியிட்டார். அதே வருஷம் நவம்பரில், முதல் அறிவிப்பை ரத்து செய்து ஒரு அறிவிப்பும் கடமலேப்புத்துரை பெரம்பூர் கண்டிகையோடு இணைத்து, பஞ்சாயத்தின் அங்கத்தினர்களின் எண்ணிக்கையை 13 ஆக்கி மற்றேர் அறிவிப்பும் வெளியிட்டார், கடமலேப் புத்துTரில் வரி செலுத்தும் அவ்வூர் வாசி, கடமலேபுத்துர் 500 க்கு மேற்பட்ட ஜனத்தொகை கொண்டது. ஆகையால் மேற்படி இணைப்பு செல்லாது என்று ரிட்மனு தாக்கல் செய்தார். மனுவை கனம் நீதிபதி வீராசாமி அவர்கள் நிராகரித்தார். அதன்மேல் இந்த ரிட் அப்பீல் வந்துள்ளது. அப்பீல்தாரர் சார்பில், பஞ்சாயத்துச் சட்டம் 3. (1) (b) ன்கீழ், ஒவ்வொரு ரெவின்யூ கிராமமும் ஒரு தனிப் பிரிவாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் பல கிராமங்களே இணேத்து ஒரு கிராமம் என்று அறிவிக்க இன்ஸ்பெக்டருக்கு அதிகாரம் இல்லே என்றும் வாதாடப்பட்டது. ஆனால், அதே