பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/888

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 அங்கத்தினர் என்ற முறையில் அல்ல. 106-வது பிரிவின்கீழ் அங்கத்தினர் என்ற முறையில் அவருக்குப் பாதுகாப்பு கிடைக்காது. அனுமதி தேவை என்று தீர்மானித்த் போதிலும் சரியான் அனுமதி கலெக்ட்ரால் தரப்பட்டு விட்டது. --- - - முடிவில், நம்பிக்கை மோசடிக் குற்றத்தின்கீழ் விடுதலே செய்யப்பட்டதை ரத்து செய்யப்ப்ட்டு, மாஜிஸ்டிரேட் அளித்த தண்டனையை உறுதி செய்யப்பட்டது. tc. R. P. No. 11|62, L. w. 77, 182.] சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் கருத்து அருள்சாமி, சென்னே உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை ஆகேஷபித்து, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் தாக்கல் செய்தார். ‘அப்பீல் மனுதாரரின் அதிகார பதவி, குற்றம் புரிந்த தற்கான வாய்ப்பை அளித்திருக்கிறது. பணத்தை கையாடல் செய்தது, அதிகாரபூர்வமான கடமைகளே நிறைவேற்றும் போதோ அல்லது அப்படி நிறைவேற்றுவது போல் தோன்றும்படி செயலாற்றும்போதோ ஏற்பட்டது அல்ல; எனவே, கிரிமினல் வழக்குத் தொடர அரசாங்க அனுமதி தேவை இல்லே?’ என்று கூறி, அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது. [The Hindu 8-9-663