உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 பஞ்சாயத்துப் பணத்தைக் கணக்கில் பதிவு செய்து அப்பேர்தைக்கப்போது பாங்குக்கு அனுப்பி விடவேண்டும். வேண்டும்போது பாங்கிலிருந்து எடுத்துக் கொள்ளலாமே பன்றிக் கையிருப்பில் அதிகமாக வைத்துக் கொள்ளக் கூடாது. சொந்தப் பணத்தையும், பஞ்சாயத்துப் பணத்தையும் கலந்து விடக்கூடாது. எந்த நிமிஷத்திலும் பஞ்சாயத்தின் இருப்புத் தொகை யைக் காட்டும்படி மேல் அதிகாரிகள் கேட்கலாம். அப்போது கணக்குப்படி பணம் சரியாக இருப்பு இருக்க வேண்டும். குறையக் கூடாது. இருப்பு குறைந்தால் பணம் கையாடல் செய்ததாக குற்றம் சாட்டப்படும். பஞ்சாயத்துக்கு வரவேண்டிய இனங்களைக் குறித்த கணக்குப் புத்தகத்தை ஒழுங்காக வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வசூலிப்பது சாத்தியமாகும். நிர்வாக அதிகாரி இல்லாத பஞ்சாயத்துகளில் தலைவரே இதையெல்லாம் செய்து வரவேண்டும். 57. நிர்வாக அதிகாரி என்பவர் யார்? பஞ்சாயத்து சட்டத்தின் கீழ் ஒரு பஞ்சாயத்தை நிர்வகிப் பதற்கு அரசாங்கத்தாரால் நியமிக்கப்படும் அதிகாரி இவர். * எக்ஸிக்யூடிவ் ஆபீஸர் என்றும் அழைக்கப்படுவார். பஞ்சாயத்து ஊழியர் அனைவரைபும் மேற்பார்வையிட்டு வேலை வாங்குவது இவர் பொறுப்பு. பஞ்சாயத்து சம்பந்தப்பட்ட தஸ்தாவேஜுகளை பத்திர மாக இவர் பாதுகாப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். பஞ்சாயத்து நிறைவேற்றும் தீர்மானங்களே அமுலுக்குக் கொண்டு வருவது இவர் பொறுப்பாகும். பஞ்சாயத்தின் நிதியிலிருந்து இவருக்கு சம்பளம் கொடுக்கப்படும். பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர், அங்கத்தினர்கள் ஆகியோர் பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகிப்பவர்கள். பொதுமக்களின் பிரதிநிதிகள் எனவே, இவர்கள் கொள்கைகளை வகுத்துக் கொடுக்க முடியும்.