பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/893

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 விட்டாரா என்பதுதான். வேறுவிதமாகச் சொன்னல் கோர்ட் கலேயும் வரை சிறை தண்டனே பெறுவது ஒழுக்கக் குறைவை ஏற்படுத்துமா என்பதுதான். - ஒழுக்கக் குறைவு என்ற பதம் மிகவும் தெளிவற்றதாகும். அது சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு பொருள் தரும். தண்டிக்கத்தக்க ஒவ்வொரு குற்றமும் ஒழுக்கக் குறைவு உடையதாகாது. ஒரு குற்றம் ஒழுக்கக் குறைவு கொண்டதா இல்லேயா என்று தீர்மானிப்பதற்கு சாதாரணமாக, மூன்று பரிசீலனைகள் கையாளப்படலாம். (1) பொது ஜனங்களின் மனச்சாட்சி அதிர்ச்சியடையும் தன்மையுள்ளதாக, தண்டிக் கப்பட்ட குற்றம் அமைந்திருக்கிறதா? (2) குற்றச் செய்கைக்கான நோக்கம் மிகவும் கீழ்த்தரமானதா? (3) குற்றச் செயல் புரிந்துவிட்ட காரணத்துக்காக அதைப் புரிந்த நபர் இழிவானவராகக் கருதப்படக் கூடுமா? அல்லது சமூகத்தால் ஒதுக்கப்படக் கூடுமா? சம்பந்தப்பட்ட தீர்ப்புகளே எல்லாம் ஆராய்ந்தால், மனு தாரர் புரிந்த குற்றம் ஒழுக்கக் குறைவு கொண்டதாகாது. செஷன்ஸ் நீதிபதி கூறியிருப்பதுபோல், மனுதாரருக்கு சொந்த அக்கறை எதுவும் இல்லே. குற்றம் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருக்கவில்லே. அவருக்கு குற்றம் புரியும் நோக்கம் இல்லாததால், அவருடைய செய்கை ஒழுக்கக் குறைவு கொண்டது ஆகாது என்பதோடு, பஞ்சாயத்துச் சட்டம் 26 (a) பிரிவின்கீழ் அவர் அருகதை அற்றவர் ஆக வில்லே. மனு அனுமதிக்கப்பட்டு, மனுதாரர் பதவி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. IC. R. P. No. 125964. L. w. 78. 319.