15 வழக்கு: 6. சென்னை உயர்நீதி மன்றம் கனம் நீதிபதி வீராசாமி அவர்கள். மனுதாரர் : சின்னத்தம்பி எதிர்மனுதாரர் : அதிராம்பட்டினம் பஞ்சாயத்து - . நிர்வாக அதிகாரி. விஷயம் பஞ்சாயத்துச் சட்டம் 27 (2) பிரிவின்படி, மூன்று கூட்டங்களுக்கு தொடர்ந்து வராத அங்கத் தினர் தகுதி இழந்துவிட்ட பின்னர், பிறகு நடை பெற்ற கூட்டங்களில் பங்கெடுத்ததன்மூலம் அங்கத் தினராக அவர் தொடர்ந்து இருப்பதாக கருதப்பட முடியுமா? . வழக்கின் சுருக்கம் மனுதாரர் அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம்) பஞ்சா யத்து அங்கத்தினர். அவர் தொடர்ந்து மூன்று கூட்டங் களுக்கு ஆஜராகவில்லை. பிறகு, நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். பட்டுக்கோட்டை ஜில்லா முன்சீப், மனுதாரர் மூன்று கூட்டங்களுக்கான அறிவிப்பை பெற்றி ருந்தும் கூட்டங்களுக்கு ஆஜராகத் தவறியதால் பஞ்சாயத் துச் சட்டம் 26 (') பிரிவின்படி, அங்கத்தினர் தகுதி இழந்த தாகக் கூறி, 28-வது பிரிவின்கீழ் உத்தரவு பிறப்பித்தார். அதை ஆக்ஷேபித்து மனுதாரர் உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். தீர்ப்பின் சாரம் அங்கத்தினர் தகுதி இழந்துவிட்ட செய்தியை, நிர்வாக அதிகாரி 27 (2) பிரிவில் கண்டுள்ளபடி குறிப்பிட்ட காலத் துக்குள் பஞ்சாயத்தின் கவனத்துக்கு கொண்டுவராததால், அது அவருடைய தகுதி இன்மையைப் பற்றிய சர்ச்சையை எழுப்ப முடியாது என்று மனுதாரர் தரப்பில் வாதாடப் பட்டது. மேலும் பிந்திய கூட்டங்களில் கலந்துகொண்டிருப் பதாலும், கூட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் அனுப்பப்பட்டி ருப்பதாலும் பஞ்சாயத்தானது அவருடைய தகுதி இன்மையை பொருட்படுத்தவில்லே என்று வாதாடப்படுகிறது. இந்த
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/894
Appearance